உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9,970 ரயில் ஓட்டுநர்களை தேர்வு செய்கிறது ரயில்வே

9,970 ரயில் ஓட்டுநர்களை தேர்வு செய்கிறது ரயில்வே

சென்னை : ரயில்வேயில் நாடு முழுதும், 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில், 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல் கட்டமாக, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பிரிவு பணியிடங்களை நிரப்ப, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுதும் 9,970 உதவி ஓட்டுநர் பயணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, ரயில்வே கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில், 1,461, தெற்கு மத்திய ரயில்வேயில், 989, மேற்கு ரயில்வேயில், 885, தெற்கு கிழக்கு ரயில்வேயில், 796, கிழக்கு ரயில்வேயில்,768 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தெற்கு ரயில்வேயில், 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ., டிப்ளமா, பி.இ., - பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமா, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல், 10 முதல் விண்ணப்பிக்கலாம். மே 9ம் தேதி கடைசி நாள். அனைத்து ஆர்.ஆர்.பி., இணையதளங்களிலும், இதற்கான முழு தகவலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாமரன்
மார் 26, 2025 12:57

தெற்கு ரயில்வே இடங்களுக்கு அஸ்ஸாம் அருணாசலப் பிரதேசம் குசராத்து அல்லது காஷ்மீரில் தேர்வு மையம் போடுங்க ஆபீஸர்.. அதையும் மீறி எக்சாம் எழுத வந்தா கடைசி நேரத்தில் இன்னிக்கு அமாவாசை அப்பிடின்னு எதாவது சொல்லி போ போன்னு திரும்ப அனுப்புங்க... வேற நல்ல ஐடியா வேணும்னா பகோடாஸ் சொல்வாய்ங்க... டீம்கா ஒயிக


Apposthalan samlin
மார் 26, 2025 11:13

9968 பேர் வடகன்களாக தான் இருக்கும் கேட்டால் தமிழக மக்களுக்கு கல்வி தகுதி இல்லை என்று சொல்லுவார்கள் .லாலு அமைச்சரா இருக்கும் பொது அதனை பெரும் பீஹாரிகள் தான் .


Sampath Kumar
மார் 26, 2025 09:45

ஒரு தேர்வை கூட ஒழுங்கா நடத்த வாக்கு இல்லை இவர்கள் தேர்ந்து ஏடுத்து ?/ அம்புட்டும் உ.பி பிகாரி காரணன் தான் ரயில் ஓட்டுவேன் நம்ம ஆளுக்கு ரயில் ஏற கூட முடியாத நொண்டிகள் ஆகிடுவானுக ரைலேய வடகன் கட்டுப்பாட்டில் ள்ளது


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 26, 2025 09:16

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்காமல் இருப்பதற்கு பல உப்பு சப்பில்ல்லாத காரணங்கள். அதில் இதுவும் ஒன்று .


Appa V
மார் 26, 2025 06:21

மெட்ரோ ரெயில்களில் மற்றும் இந்தியன் ரெயில்வேயில் ஓய்வு பெற்ற பணியார்களை நியமனம் செய்வதை நிறுத்தி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்


புதிய வீடியோ