உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, துாத்துக்குடி ரயில் நிலையம் பகுதியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 4 செ.மீ., வால்பாறை, சாத்தான்குளம் பகுதிகளில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெயில் தாக்கம்

நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் மற்றும் மதுரையில் தலா, 37.5 டிகிரி செல்ஷியஸ், சேலம் 36.8, திருச்சியில் 36.7 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்ஷியசாக வெயில் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி