திருநெல்வேலி, துாத்துக்குடியில் மழை
திருநெல்வேலி, மார்ச் 23- திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று அதிகாலை பலத்த மழைபெய்தது. துாத்துக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியது. கோவில்பட்டியிலும் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழை நீர் பெருமளவு தேங்கியது. திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ததால்மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால் தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை.