கோவை திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை
சென்னை: தமிழகத்தில் கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.மத்திய வங்க கடலில் மையம் கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து செல்கிறது. ஒடிசாவின் பாரதீப் பகுதியில் 650 கி.மீ தொலைவிலும், மே.வங்கம் மாநிலத்தில் இருந்து 740 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் இரவு 10 மணியளவில் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்காரணமாக சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் கிருஷ்ணகிரி வேலூர் தருமபுரி , திருப்பத்தூர் வேலூர் தி.மலை,கள்ளக்குறிச்சி, ஈரோடு,சேலம் நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம் நாமக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர். மதுரை, திண்டுக்கல், தேனி தென்காசி, நெல்லை, குமரி கோவை: ராமநாதபுரம் சிங்காநல்லூர் சுங்கம் திருப்பத்தூர்: வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை: விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.