உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 14 மாவட்டம், நாளை 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 14 மாவட்டம், நாளை 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 04) 14 மாவட்டங்களிலும், நாளை (செப் 05) 4 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wpnjam14&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kumar
செப் 04, 2026 14:26

வானிலை கூறிய பெரும்பால இடங்களில் மழை பெய்வது குறைவாக தான் இருக்கிறது.. நல்ல தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்


மேலும் செய்திகள்