உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டி உள்ள கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்* சென்னை* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* திருவள்ளூர்* விழுப்புரம்* கடலூர்* மதுரை* திண்டுக்கல்* அரியலூர்* பெரம்பலூர்* கரூர்* திருச்சி* ஈரோடு* சேலம்* நாமக்கல்* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்* புதுச்சேரி* காரைக்கால், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ