உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

 வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதி களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !