உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கு இடம் கிடைக்குமா?

பழனிசாமி அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கு இடம் கிடைக்குமா?

கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ. மத்தியில் ஆட்சி பொறுப்புஏற்றது முதல் தற்போது வரை 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி, மூலதன செலவுக்கு மட்டும் ரூ.112 லட்சம் கோடி வழங்கியுள்ளார். 400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்த அரசு முக்கியத்துவம் தருகிறது. சுகாதாரத்துறைக்கும் நிறைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும், ஜி.எஸ்.டி., தவிர பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தனியாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்து பழனிசாமி தலைமையில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமையப் போகிறது. இதில் எவ்வித மாறுபாடும் இல்லை. அதாவது, பழனிசாமி முதல்வராவார். அவருடைய அமைச்சரவையில் பா.ஜ., இடம் பெறுவது குறித்து, அந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும். -நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூன் 12, 2025 15:56

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆக முடியுமா?


புரொடஸ்டர்
ஜூன் 12, 2025 09:23

2026 தேர்தலில் பழனிசாமி தோல்வி அடைந்து மாமனார் வீட்டில் காலம் தள்ளும்போது பாஜகவும் பங்கேற்குமா நாகேந்திரன்?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 12, 2025 09:36

மாமனார் வீட்டுக்கு பாஜக செல்லாது ஆனால் தேர்தலில் தோற்று ஜெயிலில் இருக்கும் ஸ்டாலின் மற்றும் அவர் குடும்பத்தை முதல்வர் அண்ணாமலை அவர்கள் துக்கம் விசாரிக்க செல்வார் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை