சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 120 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்துள்ளது. தற்போதும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் 120 நாமக்கல் 118 புதுச்சத்திரம் 82 எருமப்பட்டி 60 சேந்தமங்கலம் 51 கலெக்டர் ஆபீஸ் 39.2 குமாரபாளையம் 34.2 மோகனூர் 29கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலவரப்பள்ளி அணை 90 ஓசூர் 48 பாம்பார் அணை 42 கிருஷ்ணகிரி 40.2 பரூர் 35.6 கேஆர்பி அணை 32.8 ஜம்பு குட்டப்பட்டி 32 ஊத்தங்கரை 31.4 தென்கணிக்கோட்டை 22 ராயக்கோட்டை 17தர்மபுரி மாவட்டம்
பென்னாகரம் 62 பாப்பிரெட்டிப்பட்டி 48 அரூர் 39தர்மபுரி 35 மாரண்டஹள்ளி 29சேலம் மாவட்டம்
மேட்டூர் 100.6 ஆனை மடுவு அணை 58 தம்மம்பட்டி 55 ஆத்தூர் 46 கரிய கோவில் அணை 40 சேலம் 39.4 எடப்பாடி 30.6 ஏற்காடு 30 கெங்கவல்லி 29 வீரகனூர் 29 தலைவாசல் 27 டேனிஸ்பேட்டை 23 ஏத்தாப்பூர் 20 ஓமலூர் 18ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலம் 48 அம்மாபேட்டை 45 வரட்டு பள்ளம் 39.8 பெருந்துறை 35 பவானி 24.8 ஈரோடு 23.6 கவுந்தப்பாடி 22.2 மொடக்குறிச்சி 20 குண்டேரி பள்ளம் 19.8 கொடிவேரி 18 கோபிசெட்டிபாளையம் 9.2நீலகிரி மாவட்டம்
கோடநாடு 39 ஊட்டி 26.1 பார்வுட் 15 குந்தா 15 வென்ட்ஒர்த் 15 கிண்ணக்கொரை 13 பில்லிமலை எஸ்டேட் 10அரியலூர் மாவட்டம்
சுத்தமல்லி அணை 104 திருமானூர் 102.2 குருவடி 86.5 ஜெயங்கொண்டம் 77 செந்துறை 45.2 அரியலூர் 27.2 ஆண்டிமடம் 21.4செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு 69.6 மதுராந்தகம் 49.2 திருக்கழுக்குன்றம் 37.2 திருப்போரூர் 18.4 சென்னை
ஈஞ்சம்பாக்கம் 52.5 கள்ளக்குறிச்சி மாவட்டம்
ரிஷிவந்தியம் 142 கலயநல்லூர் 126 தியாகதுருகம் 116 மணலூர்பேட்டை 110 சூளாங்குறிச்சி 105 விருகவூர் 90 மணிமுத்தாறு அணை 88 மானாம்பூண்டி 86ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் 113.7 தங்கச்சிமடம் 74.2 மண்டபம் 72.6 பாம்பன் 64.1சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி 43 திருப்பத்தூர் 20.6 திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி 52 வலங்கைமான் 41 முத்துப்பேட்டை 26.2 நீடாமங்கலம் 20.6திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் 46 வட புதுப்பட்டு 38 வாணியம்பாடி 21 நாட்றம்பள்ளி 17 திருப்பத்தூர் 11.2 திருவண்ணாமலை
ஆரணி 41 செங்கம் 35.8 தண்டராம்பட்டு 34.6 போளூர் 30.4 கீழ்பெண்ணாத்தூர் 30 திருவண்ணாமலை 24 வந்தவாசி 16 விழுப்புரம் மாவட்டம்
முகையூர் 70 செம்மேடு 38.4 அவலூர்பேட்டை 37 விழுப்புரம் 36 திருவெண்ணைநல்லூர் 25கனமழை எச்சரிக்கை!
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.