உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி!

முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி!

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விழாவில் இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். முதலாம் ராஜேந்திர சோழ மன்னன், தன் தந்தை ராஜராஜன் கட்டிய கோவிலை போலவே கட்டிய கோவில் தான், அரியலுார் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில். கங்கையை வெற்றி கொண்டதன் நினைவாக இந்த நகரம் உருவாக்கி, அதை தன் தலைநகராக மாற்றினார் ராஜேந்திர சோழன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q7hsp79m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த கோவிலில் இன்று ராஜேந்திர சோழன் நாணயம் வெளியிடும் விழா மற்றும் ஆடித்திருவாதிரை விழா, ராஜேந்திரன் வெற்றிகளை கொண்டாடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.பிரதமர் மோடி, கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள், ஆதினங்கள், ஆன்மிக பெரியோர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஓதுவார்களின் தேவார திருமுறை பாராயணம் நடந்தது.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!

தொடர்ந்து இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. குழுவினர் பாடிய ஓம் சிவோஹம் பாடலை பிரதமர் மோடி தாளம் போட்டு ரசித்தார். பாடல் முடிந்ததும், மோடி எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள, 'நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க' பாடலை, குழுவினர் பாடினர். அதையும் மோடி பக்தி பரவசத்துடன் கேட்டு ரசித்தார்.பின்னர், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 27, 2025 21:22

மனப்பூர்வமான வாழ்த்துகிறேன் .. இதை எல்லாம் நாடு முழுதும் பள்ளிகளில் சொல்லி கொடுக்க வழி செய்வாரா ???


Rathna
ஜூலை 27, 2025 18:10

ராஜராஜனின் சமாதி, உடையார் பாளையத்தில் கவனிப்பார் இல்லாமல் இருப்பது தமிழகத்திற்கு பெருமையல்ல.


sundarsvpr
ஜூலை 27, 2025 14:13

ஸ்டாலின் உடல் நலம் தேறி இதுபோன்ற விழாக்கள் நடத்தி கலந்துகொண்டு பாராட்டுகளை பெறவேண்டும். 2026 தேர்தல் வருவதால் ஸ்டாலின் நிச்சியம் நடத்துவார்.


V Venkatachalam
ஜூலை 27, 2025 15:30

ஓ சாராய வியாபாரிக்கு உடம்பு சரியில்லை தான் போல. சாராய வியாபாரி விழா நடத்துனா அது ஊழல் விழாவாதானே இருக்கும். அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு? திராவிடியா மூடல் ஆட்சியில குடிகாரன் செத்துப்போயிட்டா ரூ 10 லட்சம்.. அரசு ஊழியன் செத்து போயிட்டா ரூ 3 லட்சம். நான்காண்டு நல்லாட்சி? நமக்கு இதுவே சாட்சி


Elanchelian
ஜூலை 27, 2025 16:14

தமிழர்களை மறந்த தெலுங்கர்கள் நினைவூட்டும் வடக்கர்கள்


முக்கிய வீடியோ