உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ரஜினி

அரசியல் கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ரஜினி

சென்னை: ‛‛தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்'' என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி கூறினார்.படப்பிடிப்புக்கு செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியிலும், சினிமா ரீதியிலும் கேள்விகள் கேட்கப்படும். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி அளிக்கும் பதில் அவ்வபோது பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்துவது உண்டு. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lcnvf1co&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛ நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி '' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வரியில் வாழ்த்துகள் என பதிலளித்து விட்டு சென்றார்.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய், விஷால் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ‛‛ அரசியல் ரீதியில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்'' என்றார். மேலும், லால் சலாம் படம் பெரும் வெற்றி அடைந்ததாகவும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

M Ramachandran
பிப் 10, 2024 20:00

அப்போ அஜீத் போல ஊடகங்களுக்கு வராமல் ஒதுங்கி இருக்கணும்


M Ramachandran
பிப் 10, 2024 19:25

சுய நல திருட்டு பிழைய்யக்க தெரிந்த கண்ன்னட நடிகர். இனி எந்த சினிமா நடிகர்களையும் நம்பக்கூடாது எல்லாம் சுய நல வாதிகள் வரும் காலத்தில் மக்கள் கவனமாகா இருக்க வேண்டும்


vbs manian
பிப் 10, 2024 19:22

எதற்கு நிருபர்களை சந்திக்க வேண்டும்.


வெகுளி
பிப் 10, 2024 18:10

வருவேன்ன்னு சொன்னது ஒரு வசனம்... வரமாட்டேன்னு சொன்னது வேறு வசனம்... நடிகர் ரஜினிதான், ஆனால் வசனகர்த்தா?...


kulandai kannan
பிப் 10, 2024 17:06

இந்த அரசியலை வைத்து பல ஆண்டுகள் சித்து விளையாட்டு புரிந்ததன் கர்மவினை தொடர்கிறது.


Anantharaman Srinivasan
பிப் 10, 2024 16:03

வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிஜேபியை ஆதரித்து வாய்ஸ் கொடுத்தால் ராஜ்யசபா சீட்.


கடுகு
பிப் 10, 2024 15:08

என்னது லால்சலாம் ஹிட்டா?! சிரிச்சாதான அடுத்த ஜோக்கு சொல்லுவ!


தத்வமசி
பிப் 10, 2024 14:43

அரசியல் சார்பற்று ஒரு நடிகர் இருக்கக் கூடாதா ? அவரு தான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று கூறி தொடங்காமல், சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிக் கொண்டார். அவரை ஏன் திரும்பத் திரும்ப கேள்வி கேட்கிறீர்கள் ? நீங்கள் கேட்காமல் இருக்கலாமே.. நமது பத்திரிக்கையாளர்கள் கட்சி சார்பு உடையவர்கள் அதனால் அப்படியே எல்லாரையும் எதிர் பார்க்கிறார்கள்.


Barakat Ali
பிப் 10, 2024 14:20

தனது திரையுலக லாபத்துக்காக அரசியல் பேசி ..... திரையில் ஹீரோ ..... உண்மையில் ஒரு ....


sridhar
பிப் 10, 2024 13:36

கேஸ்டர் ஆயில் .


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி