மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்
04-Sep-2025
தென்காசி; தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் துாத்துக்குடி வந்த அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டம் கோவிந்தபேரி சென்றார். அங்கு உள்ள சோகோ (ZOHO) தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்துக்கு வந்த அவருக்கு வருவாய்த் துறையினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஓய்வெடுத்தவர் இன்று காலை தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து வாசுதேவநல்லுாரில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் நடைபெறும் “ஒரே தேசம் - ஒரே கனவு: இளைஞர்களால் சுயசார்பு கிராமங்கள், வளர்ச்சியடைந்த பாரதம் 2047” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவிந்தபேரியில் உள்ள சோகோ வளாகத்தில் தங்கி, நாளை மதியம் புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையம் வழியாக டில்லி திரும்ப உள்ளார்.
04-Sep-2025