உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள் -10

ரம்ஜான் சிந்தனைகள் -10

வேண்டாமே ஆணவம்'நான் சொன்னால் கேட்க வேண்டும். நானே பெரியவன்' என ஆணவத்துடன் பிறருக்கு கொடுமை செய்கிறார்கள். காரணம் 'தன்னை கேட்க யார் இருக்கிறார்கள்' என்பதே அவர்களின் எண்ணம். நபிகள் நாயகம் இவர்களுக்காக அருமையான வசனத்தை கூறியுள்ளார். 'வெளி அழகை நோக்கி உலகம் ஓடுகிறது. மறுமை (மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை) நம்மை நோக்கி வருகிறது. இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மனிதர்கள் உள்ளனர். நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறுங்கள். உலக மனிதர்களாக ஆகி விடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே; கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே; செயல் இல்லை' என்கிறார். அதாவது இந்த உலகில் பாவச் செயல்களை செய்தாலும் பலன் கிடைக்கும். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியம் இருக்கலாம். கேட்டாலும் அடக்கி விடலாம். ஆனால் மறுமையில் யாரையும் அடக்க முடியாது. இங்கே செய்யும் செயல்களுக்கு அங்கே பதில் சொல்ல வேண்டியிருக்கும். பாவத்திற்கு தண்டனையாக நரக நெருப்பில் விழ வேண்டியதுதான். இனியாவது சரியான பாதையில் செல்வோமா...இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ