உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்

மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்

சென்னை: இதய பிரச்னையால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுக்கு புறப்படும் போது ' எனக்கு ஓய்வு இல்லை ' எனக்கூறிவிட்டு ராமதாஸ் சென்றார். இதய பிரச்னையால், சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில், ராமதாஸ், 86, நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ராமதாஸ் இருந்தார். மருத்துவமனையில் அவரை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், மநீம தலைவர் கமல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதேநேரத்தில் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் அன்புமணி, ராமதாசை பார்க்காமல் டாக்டர்களிடம் பேசிவிட்டு சென்றார். அவரது தாயார் சரஸ்வதியையும் சந்தித்து பேசியிருந்தார்.இந்நிலையில், சிகிச்சை முடிந்த நிலையில், ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வீட்டிற்கு புறப்படும் போது, டாக்டர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினரா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராமதாஸ், ' எனக்கு ஓய்வே கிடையாது,' எனக்கூறிவிட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
அக் 07, 2025 17:40

ஓய்வு என்பது உடலில் ஆத்துமா உள்ளவரை கிடையாது. உயிர் உள்ளவரை நிம்மதி தேவை. நிம்மதிக்கு மௌனம் முக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை