உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பு; அன்புமணியை அமைதியாக்க ராமதாஸ் திட்டம்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பு; அன்புமணியை அமைதியாக்க ராமதாஸ் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராததால், கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இருவரும் தனித்தனியே பொதுக்குழுவை கூட்டி, 'நானே தலைவர்' என அறிவித்தனர். கடந்த ஆக., 9ம் தேதி அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு, அவரை பா.ம.க., தலைவராக அங்கீகரித்து கடிதம் அனுப்பி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pt6jae25&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை ஏற்காத ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் முரளி சங்கர், எம்.எல்.ஏ., அருள், வழக்கறிஞர் அருள், சுவாமிநாதன் ஆகியோர், கடந்த 17ம் தேதி டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்தனர். பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை திரும்ப பெற வேண்டும். பா.ம.க., தலைமை அலுவலகமாக, தைலாபுரம் முகவரியை ஏற்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். பா.ம.க.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், அன்புமணியை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆவணங்களை அன்புமணி தரப்பு, கடந்த ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையிலேயே அன்புமணியை அங்கீகரித்ததாக, ராமதாஸ் தரப்பினரிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. இதை அடுத்து, பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல, ராமதாஸ் தரப்பு தயாராகி வருகிறது. இந்நிலையில், 'அன்புமணிக்கு பா.ஜ., மேலிடம் முழு ஆதரவளிப்பதால், அவரை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. எனவே, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினால், மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனின் ஆதரவு, அன்புமணிக்கு கிடைக்காமல் செய்து விடலாம்' என, ராமதாசுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திக்க, ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவு நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'அன்புமணியின் பின்னணியில் பா.ஜ., உள்ளது. ராமதாஸ் மீது பெரும் மரியாதையும், மதிப்பும் கொண்டவர் பிரதமர் மோடி. பல தருணங்களில் அதை வெளிப்படுத்தி உள்ளார். மோடி அழைப்பின்படி, சில முறை அவரை ராமதாஸ் சந்தித்துள்ளார். எனவே, மோடியை சந்தித்தால், அன்புமணி தரப்பை அமைதியாக்கி விடலாம். எனவே தான், மோடியை சந்திக்க, ராமதாஸ் நேரம் கேட்டுள்ளார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
செப் 20, 2025 12:50

கமலாலயத்தில்தான் கண்ட்ரோல் பேனல் இருக்குதா ????


ஆரூர் ரங்
செப் 20, 2025 10:50

பத்தரை கேட்டு கூட்டணிக்கு கண்டிஷன் போட்டால் ஏழரைதான் என கழற்றி விட்டு விடுவார்கள்.( ஏற்கனவே அரசுப்பணிகளில் 15 சதவீதம் உங்க ஆட்கள்தான் உள்ளனர்.). உங்க கூட்டணிக்கு ஆசைப்பட்டால் மேற்கு தென் மாவட்ட வாக்குகள் கிடைக்காது. பெரும்பாலான உங்க சாதி ஆட்களே உங்களுக்கு வாக்களிப்பதை நிறுத்திவிட்டனர்.


தமிழ்வேள்
செப் 20, 2025 10:46

வசந்த சேனைக்கும், முகுந்தனுக்கு பதவி கொடுத்து பிடுங்கி பிரச்சினை ஆனதற்கும் ஏதோ தொடர்பு உள்ளது போல தெரிகிறது....


KR india
செப் 20, 2025 10:13

மருத்துவர் ராமதாஸ் அவர்களே, சில மாதங்களுக்கு முன்பு, என்ன கூறினீர்கள் நினைவிருக்கிறதா ? பாராளுமன்ற தேர்தல் சமயத்தில், அன்புமணியும், அவர் மனைவி சௌமியா அன்புமணியும், கூட்டணியை பேசி முடித்து விட்டனர் என்றும், காலையில் எழுந்து பார்த்தால், பாரத் மாதா கி ஜெய் என்ற சத்தம் கேட்டதாகவும், தைலாபுரம் வீட்டில், எனக்கே தெரியாமல், அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க வினர், வீட்டில் டீ குடித்து கொண்டு, அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணியிடம் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறி இருந்தீர்கள். மேலும், பாரதீய ஜனதா கூட்டணியை வேண்டாம் என்று கூறியதாகவும், அன்றிரவு அன்புமணியும், சௌமியாவும் உங்கள் காலை பிடித்து, பாரதீய ஜனதா கூட்டணி தான் வேண்டும். அவர்கள் தான் அடுத்து மத்தியில் ஆட்சியை பிடிப்பார்கள் என்றும் கூறி உங்களை வற்புறுத்தி, பா.ஜ.க கூட்டணிக்கு சம்மதிக்க வைத்ததாகவும் கூறி இருந்தீர்கள். தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் கூட, இதே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்போது, பாரதீய ஜனதா கூட்டணி உங்களுக்கு கசந்தது. இப்போது, உங்கள் தேவைக்காக, பிரதமர் மோடிஜி அவர்களை சந்திக்க மட்டும் இனிக்கிறதா ? உங்களுக்கு தேவை என்றால், மட்டும் பிரதமரிடம் நட்பு பாராட்டுவதும், தேவை இல்லை என்றால், பட்டும், படாமலும் இருந்து கொள்வதும் சரியான நடைமுறை அல்ல பிரதமர் மோடிஜி அவர்களை, சந்திக்கும் முன்பு, தனது தலைமையில் உள்ள பா.ம.க அணி, பாரதீய ஜனதா கட்சி உள்ள கூட்டணியில் தான் 2026 தேர்தலில் இடம் பெறும் என்றும், கட்சி மாற மாட்டேன் என்றும் அறிவியுங்கள். அதன் பிறகு தான் உங்களுக்கு பிரதமரை சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுக்கப் பட வேண்டும்


duruvasar
செப் 20, 2025 09:44

மகனா மகளா என்று குடும்ப பாச மற்றும் சொத்து சம்பத்தப்பட்ட விவகாரம். . பஞ்சாயத்து வைக்க வேண்டியது நீதிமன்றத்தில்., பாஜவிடம் அல்ல. இது ஒரு இயக்கம் என்ற பெயரில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை. கும்பல்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 09:25

அப்போ இவிங்க கட்சில பிரச்சினையை கெளப்பி விட்டது யார்?


G Mahalingam
செப் 20, 2025 08:51

அய்யா பாமகவை திமுகவுக்கு அடகு வைத்து பெரிய பெட்டியையும் பெற்று கொண்டு மகளுக்கு செட்டில் செய்து விடுவார்.இனி பாமாகவுக்கு எதிர் காலம் இல்லை என்று அவருக்கு தெரிந்து விட்டது. இதுதான் பிரச்சினை.


Raja k
செப் 20, 2025 08:44

ஆக உங்க கட்சியோட குடுமியும் ...கைய்யுக்கு போயாச்சா?


Indian
செப் 20, 2025 07:18

முதலில் அமித்ஷா அவர்களை சந்தித்து பேசினால் தான் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கும் என்று மாங்கோக்களுக்கு தெரியாதா ?


Kasimani Baskaran
செப் 20, 2025 07:12

யாருடன் சேருவது என்பதில் அப்பனும் மகனும் போடும் நாடகம் படு மோசமானது என்பதை கட்சித்தொண்டர்கள் கூட அறிவார்கள். தவிரவும் ஸ்டாலின் கருணாநிதியில்லை என்பதை இவர் புரிந்துகொள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ