உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் – மைசூர் சிறப்பு ரயில்

ராமேஸ்வரம் – மைசூர் சிறப்பு ரயில்

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மைசூரில் இருந்து வரும் 5 முதல் நவ., 30ம் தேதி வரை வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 6:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6 முதல் டிச., 1ம் தேதி வரை வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில் மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூர் செல்லும். இந்த சிறப்பு ரயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாக இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை