உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய்க்கு ரங்கசாமி பாராட்டு

நடிகர் விஜய்க்கு ரங்கசாமி பாராட்டு

புதுச்சேரி: த.வெ.க., தலைவர் விஜய்க்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன், புதுச்சேரியில் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்று சென்றார். தொடர்ந்து, ரங்கசாமி த.வெ.க., மாநாடு குறித்த செய்திகளில் கவனம் செலுத்தி கேட்டறிந்து வந்தார்.நேற்று த.வெ.க., முதல் மாநாடு நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சியில், முன்னாள் காங்., அமைச்சர் கந்தசாமியுடன் முழுதுமாக பார்த்தார்.மாநாடு குறித்து ரங்கசாமி கூறியதாவது:நடிகர் விஜய்க்கு இளம் வயது. அவர் நினைத்திருந்தால் பல படங்களில் நடித்து, பல கோடிகள் சம்பளம் பெற்றிருக்க முடியும். ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக, சினிமாவே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்துள்ளார். இது பாராட்டுக்குரியது.மாநாட்டில் வந்துள்ளவர்கள் அனைவரும் இளைஞர்களாக உள்ளனர். மேடையிலும் அனைவரும் இளைஞர்களாக உள்ளனர். மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது. மனதார பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை