உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய் கண்முன் இளம்பெண் பலாத்காரம்: போலீஸ் கான்ஸ்டபிள்கள் 2 பேர் டிஸ்மிஸ்

தாய் கண்முன் இளம்பெண் பலாத்காரம்: போலீஸ் கான்ஸ்டபிள்கள் 2 பேர் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வாகன சோதனை என லாரியை நிறுத்தி, அதில் இருந்த இரண்டு பெண்களை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, தாய் கண் முன், 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு, சரக்கு வாகனம் ஒன்று, செப்டம்பர் 29ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தது. இந்த வாகனத்தின் ஓட்டுநர், ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை மற்றும் சுவாமி தரிசனம் செய்ய, தன் அக்காவையும், 19 வயதான அக்கா மகளையும் அழைத்து வந்துள்ளார். சரக்கு வாகனம் திருவண்ணாமலையை நெருங்கியதும், புறவழிச்சாலை வழியாக வேட்டவலம் சாலையில் இருந்து நகருக்குள் செல்ல ஓட்டுநர் திட்டமிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8fml009e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, அதிகாலை 2:00 மணியளவில், புறவழிச்சாலை வழியாக ஏந்தல் என்ற இடத்தில் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள்களாக பணிபுரிந்து வந்த சுரேஷ்ராஜ், 30, மற்றும் சுந்தர், 32, ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.அப்போது, ஓட்டுநருடன் இரண்டு பெண்கள் இருந்ததால், சந்தேகம் ஏற்படுவதாக கூறி மூவரையும் கீழே இறக்கி உள்ளனர். அப்போது, 'இது என் அக்கா, பக்கத்தில் நிற்பது என் அக்கா மகள். ஆந்திராவில் இருந்து ஆயுத பூஜைக்காக வாழைத்தார் ஏற்றி வருகிறேன். அக்கா மற்றும் அக்கா மகளையும், சுவாமி தரிசனம் செய்ய அழைத்து வந்தேன்' என ஓட்டுநர் கூறியுள்ளார்.'நீ சொல்வதை எங்களால் நம்ப முடியாது. நீ வாகனத்தை எடுத்துச் சென்று, வாழைத் தார்களை இறக்கிவிட்டு கோவிலுக்கு வந்து விடு. நாங்கள் இரண்டு பெண்களையும், எங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்து விடுகிறோம்' என்று கூறியுள்ளனர்.ஓட்டுநர் மறுப்பு தெரிவித்த போது, 'உன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து விடுவோம்' என மிரட்டி உள்ளனர். அதன்பின், இரண்டு பெண்களையும் தனித்தனியாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். இருவரையும் மிரட்டி, தாய் கண் முன், 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அதன்பின், இரண்டு பெண்களையும் அழைத்து வந்து, திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை 4:00 மணியளவில் அந்த வழியாகச் சென்ற நபர்கள், அழுது கதறியபடி நின்ற இரண்டு பெண்களிடமும் விசாரித்து உள்ளனர்.அப்போது, போலீஸ் கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர், தன் மகளின் கற்பை சூறையாடியதை தாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்து, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., சுதாகர், மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரித்தார்; சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது, போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் மனித மிருகங்களாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின்படி, மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 311ன் கீழ், போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, செப்., 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

RAINBOW
அக் 08, 2025 22:46

இதற்கும் வக்காலத்து வாங்க வக்கீல்கள் வந்திடு வாங்க


Sundaramurthy Suresh
அக் 08, 2025 18:50

குடி வெறி இப்படியெல்லாம் செய்ய தூண்டுகிறது. அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்.


.Dr.A.Joseph
அக் 08, 2025 13:29

இந்திய அரசாங்கம் இந்த இரண்டு கற்பழிப்பு குற்ற செயல்களை செய்த காவல் துறையை சார்ந்த தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் தண்டனை பொது வெளியில் வைத்து நிறைவேற்றப் பட வேண்டும். இனிவரும் காலங்களில் எளிய மக்களையும், பெண்களையும் கண்டால் போலீஸ் காரனுக்கு பயம் வரணும்


S Devaraju
அக் 06, 2025 14:05

இந்த காமுகர்களுக்கு இந்த தண்டனை போதாது


K V Ramadoss
அக் 05, 2025 11:42

நிரந்தர பணி நீக்கம் மட்டும்தான் இந்த மிருகங்களுக்கு தண்டனையா? இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி 10 வருடமாவது சிறைத்தண்டனை பெற்றுத்தர வேண்டும். போலீஸ் என்பதால் மிதமாக நடந்து கொள்கின்றனரா?


Pachaimuthu
அக் 05, 2025 08:05

துயரச்செய்திதான் ....... நடவடிக்கை நன்று. இவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உயிர் போகுமாறு தண்டனை பெற்றுத் தர வேண்டும்


.Dr.A.Joseph
அக் 08, 2025 13:30

என் எண்ணமும் அதுவே


venu gopal
அக் 05, 2025 08:00

சஸ்பெண்ட், பணிநீக்கம் என்பன கண்துடைப்பு நாடகம் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாகவே தண்டனை வழங்கலாம்


Karthik Vijayarajan
அக் 04, 2025 23:13

Are these police mens are fing their sisters and daughters


vee srikanth
அக் 04, 2025 18:23

இதற்கு யாரும் அழ மாட்டார்கள் நடிப்பில் சிவாஜியை தோற்கடித்தவர்கள்


S Nagasubramanian
அக் 04, 2025 13:30

அந்த இரண்டு கேடுகெட்ட மிருகங்களைப் பதவி நீக்கம் செய்தது சரி. தண்டனை என்னவாயிற்று?? வழக்கு பதிவு ஆகியுள்ளதல்லவா?