உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை

 கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வழங்கும்போது முதியோரிடம் கையெழுத்து பெற்றும் வழங்கலாம் என உணவு பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். இதில் அக்குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைப்படி பதிவேற்றம் செய்து, விற்பனையாளர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர். ரேஷன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஜி., சர்வர் அடிக்கடி பழுதாவதும், செயல்படாமல் போவதால், கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கூறியது. இதையடுத்து இத்திட்டத்தில் ரேஷன் பொருட்கள் பெறும் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் கைரேகை, கண் கருவிழி பதிவாகவில்லை எனில், உரிய பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை தடையின்றி விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

velu
டிச 25, 2025 12:49

நன்று முதல்வர் அவர்களே


Balakrishnan
டிச 24, 2025 23:25

நல்ல. முடிவு. பாராட்டுக்கள்.


NATARAJAN RAMANATHAN
டிச 24, 2025 17:23

Thanks. Its a very good decision.


Vella Vellapandi
டிச 24, 2025 12:34

நல்ல முடிவூ than


Krishna
டிச 24, 2025 09:31

Billions of Foreign Infiltrators Illegally Regularised by ModiMental Aadhar SpyMaster are ILLEGALLY Given All CitizenServices incl Rations etc etc by With Mere NonCitizenProofAadhar


ava
டிச 24, 2025 06:32

we have to go a common place and also staff does not accept other method for issuing the ration. no option to complaint


nagendhiran
டிச 24, 2025 06:24

சும்மாவே திருடுவானுங்க? இதில் இப்படி அனுமதி கொத்தால்...... விளங்கிடும்...


வெங்கடேஷ்
டிச 24, 2025 06:00

திருடுவதற்கு வழி ஏற்படுத்துதல்


சமீபத்திய செய்தி