உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வர் வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

சர்வர் வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், 'சர்வர்' பிரச்னையால், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படாததால், ஒரு மணி நேரத்தில், ஐந்து கார்டுதாரர்களுக்கு கூட பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால், கடை ஊழியர்களும், கார்டு தாரர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தொடர்கதையாகி வரும் இந்த பிரச்னையில், உயரதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்வு காண, ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில், பி.ஓ.எஸ்., கருவிகள் வேகமாக வேலை செய்வதில்லை. தொழில்நுட்ப கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. விரல் ரேகையை, 'ஸ்கேன்' செய்வதற்கு அதிக நேரமாகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 20 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், கருவியின் வேகம் குறைவால் தற்போது, ஐந்து பேருக்கு கூட வழங்க முடியாவில்லை.இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்கள், ஊழியர்கள் மீது தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு அரசு தீர்வு காண, வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R Manikandan
மே 13, 2025 15:01

அரசை போலவே கையாலாகாத உதவாக்கரை சர்வர்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மே 13, 2025 09:21

ஆட்சியில் இதெல்லாம் சகஜம் மக்களே. ஓட்டுப்போட்டவர்கள் உட்பட அனைவரும் அனுபவியுங்கள்.


R.RAMACHANDRAN
மே 13, 2025 07:42

அதிகார வர்கம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இல்லை.என்னென்ன முறையில் குற்றங்கள் செய்து பணத்தை ஈட்டி ஆடம்ப வாழ்க்கை வாழ்வது என்பதிலேயே குறியாக உள்ளது.


புதிய வீடியோ