உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகள் இன்று செயல்படும்

ரேஷன் கடைகள் இன்று செயல்படும்

சென்னை:தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது, இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. பொங்கலை முன்னிட்டு, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பணியை விரைவாக மேற்கொள்ள, இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும். கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்று பயனடையவும் என, உணவு வழங்கல் துறை தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !