உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் ஊழியர்கள் 12ல் காத்திருப்பு போராட்டம்

ரேஷன் ஊழியர்கள் 12ல் காத்திருப்பு போராட்டம்

சென்னை : தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை, உணவு துறையும், கூட்டுறவு துறையும் நடத்துகின்றன . இந்த கடைகளை, ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது, ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், வரும், 12ம் தேதி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் . அவர்களுடன், சென்னையில் நேற்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூடுதல் பதிவாளர் அம்ரித் பேச்சு நடத்தினர்; இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து, ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது: வரும், 12ம் தேதி திட்டமிட்டபடி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 09, 2025 07:34

ரூபாய் 3000 இடைக்கால நிவாரணம் கோருவது பிச்சை கேட்பதாகும்.ஏற்கெனவே கூட்டுறவின் கீழ் பணி புரியும் ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் சம்பளம் 01/07/1992 முதல் நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசு ஆணையை அமல்படுத்தும் விதத்திலும் நுகர் பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கும் வழங்கும் சம்பளம் 1990 முதல் உரிமையுள்ளதை அமல்படுத்தும் விதத்திலும் போராடாமல் தாழ்த்திக் கொண்டு போராடுகின்றோம் என பாசாங்கு செய்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை