உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவி அல்லது ரவி மோகன் இது தான் எனது புதுபெயர்: நடிகர் ரவி அறிவிப்பு

ரவி அல்லது ரவி மோகன் இது தான் எனது புதுபெயர்: நடிகர் ரவி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜெயம் படத்தில் அறிமுகமாகிய ரவி, தனது புதிய பெயரை ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளதாகவும், ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றம் செய்யப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை:இன்று முதல் நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன்.எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் 'ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக' மாற்றப்படுகிறது.இது, நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்மான முயற்சி.எனது புதிய பயணத்திலும், உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கிருஷ்ணன்_பொள்ளாச்சி
ஜன 14, 2025 08:07

இப்படித்தான் நாலடியான் சில ஆளும் வர்க்கம் தூண்டுதலாக அறக்கட்டளை அமைத்து என்ன செய்தார் செய்கின்றார் என்று அறிவோம் இதில் இவரும் இனைவது ஆச்சரியம்


KayD
ஜன 13, 2025 21:03

இவ்வளவு நாள் படம் ஓடும் போது காசை அள்ளும் போது ஜெயம் ரவி ல ஜெயம் இருந்துச்சு இப்போ ஒரு படம் ஓடல.. பேர நியூமராலஜி படி maathitu பெர்சனல் அது இது nu புளுகி கிட்டு இருக்கான். நல்ல படமா இருந்தா ஓடும் ரவி.. பேரில் ல ஒன்னும் இல்ல.. நீ ஒரு பப்ளிக் ஃபிகர் உனக்கு பப்ளிக் கொடுத்த பேரு ஜெயம் அத சேஞ்ச் panna பப்ளிக் ku unnai அடையாளம் தெரியாது காதலிக்க நேரமில்லை னு solla மாட்டாங்க தொலைந்து போக தூரம் இல்லை nu சொல்லிட்டு போய் கிட்டே இருப்பாங்க. Unnoda records ku unnoda original peru thaan வேணும் public ku ஜெயம் ரவி தான் வேணும்.. அப்புறம் உன் இஷ்டம்


PARTHASARATHI J S
ஜன 13, 2025 21:01

மோகன் ராசியில்லாத பெயர். ( மைக் மோகன் ). அனுமோகன் பித்துக்குளி. எனவே ஜெயம் ரவி பெயரை மாற்றாதீர்கள்.


ஆரூர் ரங்
ஜன 13, 2025 20:12

நியூமராலஜி பயித்தியம் பலரைப் பிடித்தாட்டுகிறது.


Rajan A
ஜன 13, 2025 20:08

ரொம்ப முக்கியம்


Oru Indiyan
ஜன 13, 2025 20:05

அறக்கட்டளை ஆரம்பித்து உதவுவது மிக சிறந்த செயல். வாழ்த்துக்கள்


Karthik
ஜன 13, 2025 19:24

போகிப்பண்டிகை அன்று "ஜெயம்"மை குப்பையில் போட்டுவிட்டீர்களே, ரவிமோகன்


Karthik
ஜன 13, 2025 19:03

மறுபடியும் ஆரம்பத்திலிந்தா..?? ரிப்பீட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை