உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்; உத்தர பிரதேச அரசு முன்மாதிரி நடவடிக்கை

பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்; உத்தர பிரதேச அரசு முன்மாதிரி நடவடிக்கை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள துவக்க பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உத்தர பிரதேச மாநில பள்ளி கல்வி துறை செயலர் வெளியிட்ட அறிக்கை:

பள்ளியில் காலை வகுப்பு துவங்குவதற்கு முன் மாணவர்கள் செய்தித்தாள் வாசிப்பதற்காக, 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும். அந்த, 10 நிமிடங்களில் மாணவர்கள் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டுச் செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கு ஒருவர் வாசித்துக் காட்ட வேண்டும். மாணவர்களின் சொல்வளம் மேம்பட, செய்தித்தாள்களில் இருந்து ஐந்து கடினமான சொல்லை தேர்வு செய்து, 'இன்றைய சொல்' என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும். இந்த நடவடிக்கை மூ லம், மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவனத் திறன் மற்றும் சமூக விழிப்புணர்வு மேம்படும். போலி செய்திகளை அடையாள காண முடியும். செய்தித்தாள் வாசிப்பு மட்டுமின்றி பள்ளிகள், மாணவர்களை பள்ளிக்கான சொந்த செய்தித்தாள் அ ல்லது இதழ் தயாரித்து வெளியிட ஊக்குவிக்க வேண்டும். செய்தித்தாள் தலையங்கத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் குழு விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் உத்தர பிரதேச அரசு மாவட்ட கல்வி அதிகா ரிகளுக்கு நவம்பரில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் பள்ளி மாணவர்கள், 'மொபைல் போன்', சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை தடுக்க புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ