உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழையை எதிர்கொள்ள தயார்: முருகானந்தம்

மழையை எதிர்கொள்ள தயார்: முருகானந்தம்

சென்னை: தலைமை செயலாளர் முருகானந்தம் கூறியது, அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. மழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள் கடந்த ஒரு மாதமாகவே ஏற்பாடுகளை செய்து வருகின்றன. மக்களை எங்கு தங்க வைக்க வேண்டும்; உணவு தயார் செய்ய வேண்டும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலான இடங்களில் மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்து விட்டன. பணிகள் முடியாத இடங்களில், அதிக பம்புகளை வைத்து, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தன்மைக்கேற்ப, கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

T SIVAKUMAR
அக் 15, 2024 12:08

எப்படி லுங்கி கட்டிட்டா?


Mani . V
அக் 15, 2024 05:48

வெற்றிலை, பாக்குடனா ஆபீசர்?


Kasimani Baskaran
அக் 15, 2024 05:24

எந்த அளவு பணி முடிந்திருக்கிறது என்று சொல்வதை விட்டுவிட்டு பெரும்பாலும் என்று சொல்வதெல்லாம் நிர்வாகத்துக்கு அழகல்ல. மழை வைத்துச்செய்தால் இவர்கள் ஓடிவிடுவார்களா இல்லை களத்தில் இருந்து சென்னை மக்களுக்கு உதவுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


அப்பாவி
அக் 15, 2024 03:45

நாங்க எல்லாம் பத்திரமா வூட்டில் இருப்போம். மக்களும் வீட்டில் பத்திரமாக இருக்கவும். மழை வந்து ஓடியே போயிடும். முருகரைக் கேட்டா சின்ன பருவ மழைன்னு சொல்லுவார்.


கிஜன்
அக் 15, 2024 01:39

நல்லது சார் .... அரசு பிடிவாதத்தை தளர்த்தி .... இஸ்கான் போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவிகளை ஏற்கவேண்டும் ....


புதிய வீடியோ