உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5,122 சிறுபாசன நீராதாரங்கள் ஊரக பகுதிகளில் புனரமைப்பு

5,122 சிறுபாசன நீராதாரங்கள் ஊரக பகுதிகளில் புனரமைப்பு

சென்னை:ஊரக உள்ளாட்சி பகுதிகளில், 5,122 சிறுபாசன நீராதாரங்கள், 341 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளன. ஊரக உள்ளாட்சி பகுதிகளில், சிறுபாசன ஏரிகள், குளங்கள், பாசன தேவை மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்கின்றன. முறையான பராமரிப்பின்றி, பல நீராதாரங்கள் சீரழிந்த நிலையில் உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, அவற்றை புனரமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. மொத்தம், 5,122 சிறுபாசன குளங்கள், 341 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக, சிவகங்கையில் 50 கோடி ரூபாய் செலவில் 675 ; செங்கல்பட்டில், 36.7 கோடியில் 455; புதுக்கோட்டையில் 28 கோடி ரூபாயில் 483; திருச்சியில் 18.2 கோடி ரூபாயில் 231; திண்டுக்கல்லில் 17.4 கோடி ரூபாயில் 315; திருவண்ணாமலையில் 17 கோடி ரூபாயில் 259, விருதுநகரில் 15.8 கோடியில் 236 நீராதாரங்கள் புனரமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல், கள்ளக்குறிச்சி, அரியலுார், விழுப்புரம், தென்காசி, மதுரை, திருநெல்வேலியிலும் பல கோடி ரூபாய் செலவில் குளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ