உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீட்பு பணிகளுக்காக, வேளச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும், 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் சென்னை விரைந்துள்ளன. வெள்ளம் தேங்கிய இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விழுப்புரத்தில் இருந்து 1000 டிராக்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது, சென்னைக்கு இன்று விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது. அறிக்கை; சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து விட்டது. சென்னைக்கு கணிக்கப்பட்ட மழைக்கான வாய்ப்பு இல்லை. ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது. சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும். இவ்வாறு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nandakumar
அக் 19, 2026 11:10

முந்திரிக்கொட்டை மாதிரி எதற்கு போட வேண்டும் பிறகு வாபஸ் வாங்க வேண்டும் இதே தொழிலாக போய்விட்டது. திறமை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்


Vasan
அக் 19, 2026 10:11

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே. ரெட் அலெர்ட் வரும் பின்னே, மழை பொழிந்து தீர்ந்து விடும் முன்னே.


Subramanian
அக் 19, 2026 06:12

I think the met dept can keep silent. Wherever they red alert, the rain stops. Better be silent so that the much needed rain comes even if it floods


PVSR
அக் 18, 2026 20:06

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிறது பயமுறுத்துவார்கள் பிற்பாடு வாபஸ் பெறுவார்கள். வானிலையை சரியாக கணிக்க தெரியவில்லை. தேவையில்லாமல் எல்லாரும் கைப்பேசிகளில் செய்தி அனுப்பிவிட்டு அவரவர் கடைக்கு சென்று மெழுகுவர்த்தி பிரட் பால் வாங்க அலைய விட்டார்கள்.


Vasan
அக் 18, 2026 19:57

மழை வேண்டுமெனில் செய்ய வேண்டியது யாகம். மழை வேண்டாமெனில் செய்ய வேண்டியது ரெட் அலெர்ட்.