உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15.57 லட்சம் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறை ஒப்புதல்: ஒத்துழைப்பு தராமல் பாதியில் முடக்கும் வருவாய்துறை

15.57 லட்சம் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறை ஒப்புதல்: ஒத்துழைப்பு தராமல் பாதியில் முடக்கும் வருவாய்துறை

சென்னை: சொத்து விற்பனை பத்திரப்பதிவின் போது, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, 15.57 லட்சம் ஆவணங்களுக்கு பதிவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வருவாய் துறை காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாறுதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எளிமைப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, உட்பிரிவு அவசியம் இல்லாத முழு சொத்தும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும் நிலையில், பத்திரப்பதிவை அடிப்படையாக வைத்து, பட்டா மாறுதல் செய்யும் திட்டம், 2019ல் உருவாக்கப்பட்டது. இத்திட்டம், 2020 முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த முறையில், பத்திரப்பதிவின் போது, சொத்து விற்பவர், வாங்குவோர் தொடர்பான அடையாள ஆவணங்களையும், முந்தைய பட்டா விபரங்களையும் சரி பார்த்து, சார் பதிவாளர் உறுதி செய்தால் போதும். அந்த விபரம், பதிவுத்துறையின், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' வாயிலாக, வருவாய் துறையின் தமிழ்நிலம் தகவல் தொகுப்புக்கு சென்று விடும். அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறி விடும். ஆனால், இப்பணிகளை பாதியில் முடக்கும் நோக்கத்திலேயே, வருவாய் துறை அலுவலர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆண்டுக்கு ஆயிரம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்தால், அதில், 500க்கும் குறைவான விண்ணப்பங்களுக்கு மட்டுமே, வருவாய் துறையில் பட்டா மாறுதல் நடக்கிறது. ஆதாயம் பெறுவதற்காக, ஏதேனும் காரணங்களை கூறி, விண்ணப்பங்களை வருவாய் துறை அலுவலர்கள் முடக்குவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2024ல், 15.57 லட்சம் பத்திரங்கள் அடிப்படையில், பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில், 1.02 லட்சம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு, சார் பதிவாளர் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனாலும், இவற்றில் பாதி அளவுக்கான விண்ணப்பங்களுக்கு மட்டுமே, பட்டா மாறுதல் நடந்துள்ளதாக தெரிகிறது. அனைத்து விபரங்களையும் சார் பதிவாளர் சரிபார்த்து உறுதிப்படுத்திய நிலையில், வருவாய் துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அத்துடன் பட்டா மாறுதல் முடிக்கப்பட்ட கோப்புகள் எண்ணிக்கையை வெளியிடவும் வருவாய் துறை மறுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். '

தவறான மொபைல் எண்'

வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சார் பதிவாளர்கள் ஒப்புதல் அடிப்படையில், பட்டா மாறுதலுக்கான அடுத்த கட்ட பணியின் போது, தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், பத்திரம் அடிப்படையில் வரும் மொபைல் எண் தவறாக இருப்பதால், கூடுதல் சரி பார்ப்பு பணிகள் முடங்குகின்றன. பத்திரப்பதிவு நிலையில், பொதுமக்கள் சரியான மொபைல் எண்ணை வழங்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mani
ஜூன் 21, 2025 13:54

திருடன் கிட்ட போய்....நீங்கள் திருடுவீர்களா என்று கேட்பது போல் இருக்கின்றது......எல்லாம் திருட்டு கூட்டம்....மொபைல் எண் தவறாக உள்ளது என்பது எல்லாம் பொய்.....நேரில் அவர்களிடம் சென்று பிச்சை போட்டால் தான் வேலை செய்வார்கள்.....இதெல்லாம் தெரிந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை மூடிக்கொண்டு தான் இருக்கும்.....லஞ்சம் வாங்குபவரை விட கொடுப்பவர் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள்....ஒவ்வொரு பத்திர பதிவு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை ஒருவரை கண்காணிக்க பணி அமர்த்தலாமே....அப்படி பணி அமர்த்தினால்...அவனையும் மாற்றி விடுவார்கள் பணத்தை காட்டி....இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுக்கலாம்


BALA MURUGAN K
ஜூன் 21, 2025 07:13

திருடன் கிட்ட போய்....நீங்கள் திருடுவீர்களா என்று கேட்பது போல் இருக்கின்றது......எல்லாம் திருட்டு கூட்டம்....மொபைல் எண் தவறாக உள்ளது என்பது எல்லாம் பொய்.....நேரில் அவர்களிடம் சென்று பிச்சை போட்டால் தான் வேலை செய்வார்கள்.....இதெல்லாம் தெரிந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை மூடிக்கொண்டு தான் இருக்கும்.....லஞ்சம் வாங்குபவரை விட கொடுப்பவர் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள்....ஒவ்வொரு பத்திர பதிவு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை ஒருவரை கண்காணிக்க பணி அமர்த்தலாமே....அப்படி பணி அமர்த்தினால்...அவனையும் மாற்றி விடுவார்கள் பணத்தை காட்டி....இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுக்கலாம்


Purushothaman Dr.V
ஜூன் 17, 2025 15:21

லன்ஜம் தலைவிரித்தாடும் துறை வருவாய்த்துறை. இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. இதற்கெல்லாம் மாற்றம் வருமா?


Ramesh S
ஜூன் 16, 2025 21:39

ஓசூர் தாசில்தார் பட்டா மாற்றம் செய்ய விண்ணபித்தால் கூட்டு மற்றும் தனி இரன்டும் கேன்சல் செய்து விட்டர் பின்னர் மீன்டூம் விண்ணபித்து பெறுநர் பெறுநர் விவரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா விளக்கம் கூறவும்.


தமிழன்
ஜூன் 16, 2025 13:08

கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் நடக்க வேண்டியது நடக்கும். இது கூட புரியாமல் இருந்தால் எப்படி? வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்து பாருங்கள். எந்த இசேவை நிலையத்தில் விண்ணப்பித்தாலும் அது கிடப்பில் போடப்படும். சொத்து மதிப்பில் % கேட்கும் நிலைமை வந்து விட்டது.


K NARAYNASAMY
ஜூன் 16, 2025 11:26

இந்த வருவாய்த்துறை லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் , பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். வீ எ ஓ முதல் தாசில்டர் வரை நியாமா நடப்போது போல் பேசி தலையாரி புயூன் போன்ற ஏஜென்ட் மூலம் பணம் வாங்கிட்டுதான் செய்வாங்க , இதுல என் சொந்த அனுபவம் உண்டு.


gvr
ஜூன் 16, 2025 09:13

Most corrupt departments.


N DHANDAPANI
ஜூன் 16, 2025 08:13

அனைவருக்கும் முதற்கண் வணக்கம். இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. வருவாய் துறையை பொறுத்த அளவில் தங்களுடைய தனித்துவ எண்ணாக நிலங்களின் சர்வே எண்களையும், பட்டா எண்களையும், பூமி வகைகளையும் உரிமையாளர் உடைய பெயருக்கான அடிப்படை அத்தாட்சிக்கான ஏதாவது எண் வாக்காளர், குடியுரிமை, ரேஷன் போன்ற, அவர் இறந்திருந்தால் அதற்கான இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் செயல்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறு இருக்க அடிக்கடி மாறக்கூடிய கிட்டத்தட்ட உபயோகிக்கும் வாகனம் மாறுவது போல மொபைல் எண் அடிப்படையில் இவ்வளவு முக்கியமான பட்டா மாறுதலை நிறுத்தி வைப்பது முழுவதும் நியாயமற்றது. கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் DRO அவர்கள் இதனை துறை செயலர் மூலமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம். தமிழக விவசாயிகள் சங்கம்


R.RAMACHANDRAN
ஜூன் 16, 2025 07:38

இரண்டு துறைகளில் உள்ளவர்களும் லஞ்சம் அளிப்பவர்களுக்கே சேவை என்ற நிலையில் உறுதியாக இருந்து கொண்டு அரசு ஊழியர்கள் எனற போர்வையில் அரசு இழப்பு ஏற்படுத்துவதோடு அவமறையத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.இவர்கள் நேர்மையானவர்கள் போல பாசாங்கு செய்கின்றனர்


Rohit Priya
ஜூன் 17, 2025 22:22

உண்மை


Kasimani Baskaran
ஜூன் 16, 2025 03:51

சார்பதிவாளர் - பெயரிலேயே சிக்கல்..


sankaran
ஜூன் 16, 2025 10:55

கடவள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார்