உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணையதளத்தில் இலவசமாக பத்திரப்பதிவு விண்ணப்பங்கள்

இணையதளத்தில் இலவசமாக பத்திரப்பதிவு விண்ணப்பங்கள்

மதுரை: பத்திரப்பதிவு விண்ணப்ப தட்டுப்பாட்டை போக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் அனைத்து விண்ணப்பங்களையும் இணையதளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பெறலாம் என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. கிரைய ஆவணம், அடமான ஆவணம், குத்தகை ஆவணம் உட்பட 41 வகைகளுக்கான விண்ணப்பங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கிடைப்பது 'குதிரை கொம்பாக' உள்ளது. கூட்டுறவு அச்சகங்களில் இருந்து அச்சடித்து தராததால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சில ஆவண எழுத்தர்கள், தாங்களாக விண்ணப்பம் அச்சடித்து விற்கின்றனர். இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனக்கருதிய பத்திரப்பதிவு துறை, இதை தடுக்கவும், தடையின்றி விண்ணப்பம் கிடைக்கவும் www.tnreginet.net என்ற இணையதளத்தில் இலவசமாக 'டவுன் லோடு' செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. மதுரை மாவட்ட பதிவாளர் ராஜசேகரன் கூறுகையில், ''மக்கள் தாமாக ஆவணம் தயாரிக்க உதவும் எளிய மாதிரி படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி ஆவணதாரர்கள் ஆவணம் எழுதி தாக்கல் செய்யலாம். திருமண பதிவு, வில்லங்க சான்று நகல் மனு போன்றவற்றையும் இணையதளத்தில் பெறலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Muthukumaran
அக் 04, 2025 18:48

விசாரணை கமிஷனே அமைக்காமல் அரசே தனக்குத்தோன்றியதை செய்திருக்கலாம் அவர்களுக்கு சாதகமாக கமிஷன் அறிக்கை கொடுக்கும் என நம்பிக்கை இழந்துவிட்டது போல் ஒரு தோற்றம் உருவாகிறது. நீதி மன்றம் வழக்கு தொடர்பான கருத்துக்களை கூறாமல் பிற விடயங்களைப் பேசுகிறது எனவும் பலர் ஊடகங்களில் பதிவிடுகிறிர்கள் இதன் முடிவு அரசுக்கு எவ்வித பயனையும் அளிக்கப்போவதில்லை என்றே செயல்பாடுகள் தோன்றுகிறது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி