உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம்; டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

 ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம்; டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

சென்னை: தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனின் அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில், ஓரிரு வாரங்களில் பெய்ய வேண்டிய மழை, ஓரிரு மணி நேரங்களில் கொட்டி தீர்த்துள்ளது. இதனால், 5 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உ ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ