மாநகரில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
மாநகரில் 2வது நாளாகசாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்ஈரோடு, அக். 5-ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால நெரிசலை தவிர்க்கும் வகையில், ஈரோடு மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இதன்படி நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் காளை மாட்டு சிலை வரை - அதாவது, காவேரி ரோடு, ஆர்.கே.வி.ரோடு, காந்திஜி ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.இரண்டாவது நாளாக நேற்றும் பணி தொடர்ந்தது. இதில் ப.செ.பார்க் முதல் அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை, மீனாட்சி சுந்தரனார் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது.