உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவி அமுதராணியின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமுதராணி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவரது மகளுக்கு கிறிஸ்தவர் (பிற்படுத்தப்பட்டோர்) என ஜாதிச் சான்றிதழையும் பெற்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ntkaa2zm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்படியிருக்கையில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, பட்டியலினத்தவருக்கு (பொது) ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இது சட்டப்படி தவறு என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அமுதராணிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அமுதராணியின் வெற்றி செல்லாது. கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து, பின்னர் பட்டியலினத்தவர் எனக் கூறி அரசின் பலன்களை அனுபவிப்பது குற்றம். அரசியல் கட்சியின் பகடைக்காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறி, தேர்தல் ஜனநாயகத்தையே கேலி கூத்தாக்குகின்றனர் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

GMM
மே 16, 2025 19:21

சாதி மறுப்பு, மதம் மறுப்பு குடிமகள் எந்த சலுகையும் பெற கூடாது. இவர்களால் சாதி, மதம் வளராது. ஒரே சாதி இட ஒதுக்கீடு நோக்கம் தன் சாதியை மேம்படுத்த உதவுகிறது. மற்றவை புல் போன்றது. சமூகம் மேன்பட உதவாது.


என்றும் இந்தியன்
மே 16, 2025 17:02

ஆகவே இனிவரும் தீர்ப்புகள் இப்படித்தானிருக்கவேண்டும் - இந்துவாக இருக்கும் போது மட்டும் தான் எஸ் சி எஸ் டி பட்டியிலனம் ......கிறித்துவனாகவோ முஸ்லிமாகவோ மாறினால் அவர்கள் கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மட்டும் தான் என்று


மனி
மே 16, 2025 14:22

இவரு மட்டும்தான வேற யாரும் இல்ல? என்ன நீதியோ ?


நாஞ்சில் நாடோடி
மே 16, 2025 14:04

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு...


ஆரூர் ரங்
மே 16, 2025 14:03

சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தால் கோர்ட் என்ன செய்யும்? சில கிருத்துவ சபைகளில் ஜோடி யில் யாராவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தாலே திருமணம் செய்து வைக்கின்றனர். மதம் மாறியதற்கு ஆதாரம் இருந்தால் SC அல்ல எனக் கூறலாம். இத்தீர்ப்பு மனமுவந்து தாழ்த்தப்பட்ட பெண்களை மணக்க விரும்பும் உயர்சாதியினரை பின்வாங்க வைக்கும். பெண்ணுக்கு தந்தையின் சாதி குறிப்பிட்டு சான்றிதழ் வாங்கியது நியாயமே.


V Venkatachalam
மே 16, 2025 16:11

ஆரூர் அண்ணே சாதி சான்றிதழ் பற்றி கேள்வியே இல்லை. பொது தொகுதியில் நின்றது பித்தலாட்டம். கோர்ட் அதில் அதனால் பெற்ற வெற்றியை செல்லாது ன்னு சொல்லிடுச்சி.அது சரிதானே..எது கிடைத்தாலும் பத்தல பத்தல.. இந்து மதத்தில் இருந்து அல்லோலுயா மதத்துக்கு போறவங்க ஈன பிறவிங்க.


சமீபத்திய செய்தி