உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேனர், கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்; ஒரு மணி நேரம் கெடு விதித்தது ஐகோர்ட் கிளை

பேனர், கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்; ஒரு மணி நேரம் கெடு விதித்தது ஐகோர்ட் கிளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்றி தகவல் தெரிவிக்க மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளையோ, நீதிமன்றங்களின் உத்தரவுகளையோ யாரும் பொருட்படுத்துவதில்லை. போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளில், விளம்பர போர்டுகள் வைப்பது தொடர்கிறது.இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை 'அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் உத்தரவிட்டனர். அனைத்து பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மணி நேரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் மதுரை கிளை அவகாசம் வழங்கியது. அதுமட்டுமின்றி, 'மதுரையில் தற்போது ஏராளமான கொடிக் கம்பங்கள், பேனர்கள் உள்ளன. நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார்' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SRINIVASAN MANI
ஆக 22, 2025 07:38

கடற்கரைகள் சுடுகாடாக மாறிக் கொண்டிருப்பது நீதிமன்ற கண்களுக்கு தெரிந்தால் நன்மையே...


Madhan
ஆக 21, 2025 22:10

பொது இடத்தில் உள்ள தலைவர்கள் சிலை மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் இது எல்லாம் எப்போது அகற்றப்படும்


V RAMASWAMY
ஆக 21, 2025 10:18

எல்லா தெரு நாய்களையும் எல்லா கொடிக்கம்பங்களிலும் கட்டிவிடலாம்.


Prabakaran J
ஆக 21, 2025 06:27

useless (1 hr demand) - as well as political parties.


Govind
ஆக 20, 2025 23:06

இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அந்தந்த கட்சி அலுவலகத்தில் வைக்க உத்தரவிட்ட வேண்டும்.


Chandrasekaran Balasubramaniam
ஆக 21, 2025 12:08

அப்போ மெரினா விலுள்ளவைகள்?


KRISHNAN R
ஆக 20, 2025 22:34

இது காற்றோடு கலந்து போகும்


Ram
ஆக 20, 2025 20:35

நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி இந்த அரசியல் வாதிகளுக்கு பாடம் கற்பியுங்கள்


Raj
ஆக 20, 2025 19:51

கோர்ட்டின் விதிகளை நடப்பாக்காது இந்த அரசாங்கம். நீதிமன்றமும் ஒன்றும் செய்யாது.


ManiMurugan Murugan
ஆக 20, 2025 19:43

அனைத்து இடங்களிலும் குறிப்பாக மேம்பாலங்கள் போன்ற இடங்களில் பதாகை ஒட்டுவதை தவிர்க்க வேண்டும்.அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் பதாகைகள் அவரவர் கட்சி அலுவலகங்கள் முன் நிர்வாகிகள் வீட்டின் முன் மட்டும் ஒட்ட சட்டம் நீதிமன்றம் போட வேண்டும்


Ramesh Sargam
ஆக 20, 2025 19:21

அகற்றாவிடில் இனி அந்த கட்சிக்கு அனுமதி மறுக்கப்படவேண்டும் இனி எந்த மாநாடும் நடத்தக்கூடாதென்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை