உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு: தமிழகம் தேர்வாகாததன் பின்னணி

குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு: தமிழகம் தேர்வாகாததன் பின்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி, டில்லியில் நடக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்க, தமிழகம் தேர்வு செய்யப்படாததன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, 26ல், டில்லியில் குடியரசு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நடைபெறும் அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், அலங்கார வாகன ஊர்திகள் இடம்பெறும்.

பாரம்பரியம், வளர்ச்சி

இதன்படி, அடுத்த மாதம், 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, 15 மாநிலங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில், தமிழகம் இடம் பெறவில்லை. ஏழு கட்டமாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில், மாநிலங்களின் ஊர்திகள் தேர்வாகி உள்ளன. அதாவது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, திரிபுரா, ஆந்திரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், கோவா, பீஹார், பஞ்சாப், உத்தரகண்ட், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகள் தேர்வாகியுள்ளன. தமிழக ஊர்தி தேர்வு செய்யப்படாதது குறித்து, தமிழக செய்தித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில், தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுப்பு என்ற செய்தி வந்துள்ளது. ஊர்திக்கான இந்த ஆண்டு கருப்பொருள், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி என்பதாகும்.

திருப்தி அடையவில்லை

இதுதொடர்பாக நடந்த ஆறு கூட்டத்தில், செய்தித்துறை அலுவலர்கள் பங்கேற்று, வரைபட மாதிரிகள், கருப்பொருள் பாட்டு தயாரித்து சமர்ப்பித்தனர். தேர்வு குழுவினர் கூறிய திருத்தங்களையும் சரி செய்து கொடுத்தனர்.முதல் கூட்டத்தில், கீழடி வரைபடங்கள் வழங்கப்பட்டன. வளர்ச்சி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இரண்டாம் கூட்டத்தில், கீழடியில் கிடைத்த பொருட்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. வளர்ச்சி குறித்து அவர்கள் கேட்டதற்கு, 'கீழடியில் கிடைத்த பொருட்களால் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஒரு பாடல் எழுதி இசையமைத்தும் வழங்கப்பட்டது.தொடர்ந்து திருத்தங்கள் செய்தும், தேர்வு குழுவினர் திருப்தி அடையவில்லை. எனவே, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம். வேண்டுமானால், வாகனத்தை தயாரித்து, செங்கோட்டையில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டனர்.கடந்த ஆண்டு மத்திய அரசு, அலங்கார ஊர்திகள் தேர்வு தொடர்பாக, ஒரு ஒப்பந்தம் தயார் செய்தது.

அனுமதி கிடைக்கவில்லை

அதில், 'ஒவ்வொரு ஆண்டும் மத்திய பிரதேசம், குஜராத், பீஹார், ஆந்திரா மாநிலங்களின் ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கும். மற்ற, 12 மாநிலங்கள் சுழற்சி முறையில் வரும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழக செய்தித்துறை அலுவலர்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.கடந்த ஆண்டு, தமிழக அரசின் ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்று பரிசு வாங்கியது. இம்முறை ஒப்பந்த அடிப்படையிலும், சிறப்பாக மாதிரி அமையாததாலும், ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Mohan
டிச 25, 2024 15:55

என்ன இவ்வளவு வெறுப்பு காட்ராங்க திமுக அடிவருடிகள்?என்னாய்யா சும்மா ஆதி தமிழன்னு உதார் வுடறீங்களே சகிப்பு தன்மை இல்லாத வேத்து மதக்காரங்களை கண்டிக்க நெஞ்சுத் துணிவு இல்லை போப் ஐயர்னு பேர் வைச்சுக்கிட்ட வந்தேறி மதக்காரங்களின் எந்த தவறையும் ஒத்துக்குவீங்க. ஒன்னுமில்லாதததிற்கு பொங்கறவங்களே உங்க சன் டிவியில தமிழ் பாட்டுக்கு ஆங்கில எழுத்துல பாடல் வரிகளைப் போடுவது திராவிட """ஆதிதமிழர்கள்"" மாடல் அதை தப்பு சொல்ல துணிவு இல்லை. சனாதனவாதிகளை பரங்கியர்கள் அடையாளப்படுத்திய ஹிந்து என்கிற வார்த்தையின் பின்புலம் பற்றி அறியாது உளறுபவர்களே தமிழை தமில/தமிள் என்று உச்சரிக்கும் பெரும்பான்மை தமிழர்களை நீங்கள் மாற்ற முயற்சித்தது இல்லை.. ஹிந்து சமய அடியார்கள் இல்லாவிடில் தமிழ் இவ்வளவு வளர்ந்திருக்குமா? இன்றைய தேதியில் திருக்குறளே தெரியாத தமிழர்களை வளர்த்தது திராவிட விடியா மூஞ்சிகளே உங்கள் விருப்பத்திற்கு தமிழ்நாட்டில் ஆடிக் கொள்ளுங்க, மத்தியில் முறையற்று நடந்தால் வாய்ப்பு மறுக்கப்படும்.


N.Purushothaman
டிச 24, 2024 12:06

வளர்ச்சி அடைந்துள்ளதை மையப்படுத்தி கூறி இருக்கலாமே .... அது தானே உண்மை ...


N.Purushothaman
டிச 24, 2024 12:05

கோவாலாபுர குடும்பம் வளர்ச்சி அடைந்துள்ளதை மையப்படுத்தி கூறி இருக்கலாமே .... அது தானே உண்மை ...


பெரிய குத்தூசி
டிச 24, 2024 11:35

தேசப்பற்று என்றால் விலை எவ்வளவு என கேட்க்கும் திமுகவிடம், வளர்ச்சி பற்றி கேட்டல் எங்கே போகும் திமுக அரசு அதிகாரிகள். விடியாமூஞ்சி திராவிட தமிழக அரசின் குறிக்கோள் பிரிவினைவாதம், மத்திய அரசுக்கு எதிரான நிலைத்தன்மை, திருட்டு திராவிட அரசின் சிந்தனை மாறாமல் மாற்றம் நடைபெறாது. தமிழக கலாச்சாரத்தையும் வளர்ச்சியையும் சொல்ல நிறைய உள்ளது. ஒன்னு தாடிக்கார ராமசாமியை தூக்கி பிடிப்பானுக, இல்லேன்னா இவனுகளே வெச்சி எடுக்கற கீழ் அடி சாமானை வெச்சி மத்திய அரசு அதிகாரிகளை ரிஜெக்ட் பண்ண வெச்சி நாலு நாளைக்கு திமுக காசுக்கு மாரடிக்கும் டிவி ல வாங்குற காசுக்கும் கூலிக்கு விவாதம் பண்ணுவானுக. திமுக என்றால் பொய் புரட்டு, பொய்யய் உண்மையாக திரிக்கும் கட்சிதான் திருட்டு திராவிட மாடல். திராவிட மாடல் என்பது மொத்தத்தில் பொய்மை என்பதே அர்த்தம். தமிழ் நாடு மக்கள் சிந்தனையை மாற்றத்தை வரை இன்னும் சில வருடங்களில் ஒரு டம்ளர் தண்ணிக்கே கஷ்ப்பட போவது உறுதி. தண்ணிக்கே கஷும்னா சாப்பாடு


Senthil
டிச 24, 2024 16:56

தாங்கள் வருத்தப்பட வேண்டியதே இல்லை. நாங்கள் தண்ணிக்கே கஷ்டப்பட்டால் தங்களுக்கு என்ன? தாங்கள் வேண்டுமானால் தண்ணீர் உள்பட அனைத்தும் தாராளமாகக் கிடைக்கும் உபி, மபி, பீஹார், ஜார்கண்ட் போன்ற உலக பிரசித்தி பெற்ற மாநிலங்களில் டோய் வாழுங்களேன், தங்களை யாரும் தடுக்கவில்லையே தாங்கள் என்ன கதறினாலும் நாங்கள் தமிழர்கள் திமுக அதிமுகவுக்கு மட்டும்தான் ஓட்டு போடுவோம். தங்களால் முடிந்ததை செய்யலாம்.


kantharvan
டிச 24, 2024 11:13

Tamil Nadu is one of the most economically developed states in India. It has the second-largest state economy in India and is the most industrialized state in the country. Heres a look at some key aspects of Tamil Nadus development


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 20:05

You AH, get matured. Please grow.


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 10:30

ஆதித்தமிழர் ஹிந்துக்கள் அல்லர்.. நேரடியாக அல்லது மறைமுகமாக இதைச் சொல்லத்தான கீழடி ????


Senthil
டிச 24, 2024 17:08

ஆதித்தமிழர் தமிழர்கள், புதியதாக விளக்கம் தேவையில்லை. ஆனால் இன்று தமிழர்கள் மீது இந்து என்ற வர்ணம் பூசப்பட்டுள்ளது. தமிழர்கள் நாங்கள் இசக்கி, மாரி, கருப்பன், முனியன், முருகன் போன்ற தங்கள் முன்னோர்களை வழிபடுபவர்கள்.அப்படிப்பட்ட தமிழர்கள்மீது துளியும் தொடர்பு இல்லாத வடக்கனுடைய அடையாளம் திணிக்கப்பட்டுள்ளது. திணிக்கப்பட்ட விஷயங்கள் காலப்போக்கீல் கரைந்துவிடும் என நம்புகிறோம். எங்களுக்கு தேவையான விஷயங்களை நாங்கள் செய்துகொள்வோம், வெள்ளைக்காரர்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் இன்றைய ஆட்சியாளர்களால் அதைச் செய் இதைச் செய் என பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். என்று விடியுமோ?


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 20:09

பாசு .... .உங்க பதிலைப் படிச்சிட்டு உங்க பழைய கருத்தைத் தேடுனப்ப கிடைச்சது .... அதை வெச்சு உங்க அறிவையும், சிந்தனை ஓட்டத்தையும் புரிஞ்சுக்கிட்டேன் ... தமிழர்களை எவ்வளவு கேவலமாக எடைபோட்டுள்ளீர்கள் என்று ..... இதோ:... உதயநிதி கூத்தாடியா? தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பகுதியினர் படிப்பறிவில்லாத பகுத்தறிவில்லாத பாமர முட்டாள்கள். அவர்களிடம் அறிமுகமாவதற்கு எளிதான வழி சினிமாதான், அதனால்தான் அவர் சினிமாவில் நடித்திருப்பார் என கருதுகிறேன்.


nv
டிச 24, 2024 10:21

திராவிட மாடலுக்கு சிந்திக்கும் திறன் கிடையாது.. யாராவது ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டுவான். பழம்பெருமை பேசுவான், அண்ணா, பெரியார் பெருமை, இல்லேன்னா தமிழ் உருட்டு (இவனுங்களுக்கு தமிழும் ஒழுங்கா தெரியாது) ஆனா நல்லா ஊழல் செய்ய தெரியும்! அதை காட்சி படுத்த முடியாதே!!


Sampath Kumar
டிச 24, 2024 09:56

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்காதவர்கள் தமிழர்கள் வடக்கன் ஏற்று கொண்டான் . ராமாயண காலம் தொடக்கம் இன்றுவர்தொழும் வடக்கு தமிழ்நாடு இடையே பிரச்னை தான் ரணம் ஏழுவு ஏடுத்த ஆர்.எஸ்.எஸ் சிராத்தம் தான் முன்னேற்றம் இல்லை என்று காரணம் கூறும் கூமுட்டைகள் பிஜேபி ஆளும் மாநிலத்தில் மட்டும் என்ன முனேற்றம் கண்டார்கள் என்று உள்ள முடியுமா? உங்க ஊர்வலத்தில் பரிசும் பெட்ரா ஒரு மாநிலத்தை வளர்ச்சி இல்லை என்று நொண்டி ஆகு சொல்வது வடக்கன் அற்ப புத்தியை தான் காட்டுகின்றது வளத்தில் வரும் எல்லா மாநிலமும் என்ன வளர்ச்சி அடைந்தது என்பதை இந்த காட்டுமிராண்டிகள் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் மக்களை திரட்டி அடக்கணுக்களுக்கு ஏதிராக போராட்டம் நடத்த வேண்டும்


ghee
டிச 24, 2024 10:29

....வேண்டாம்


பெரிய குத்தூசி
டிச 24, 2024 11:24

உங்கள் பார்வையில் திராவிட மாடலின் பிரிவினைவாத சித்தாந்தம் உள்ளது. பார்வையை ருபாய் 500, குவாட்டர் பாட்டில் என பார்க்காமல் தேசப்பற்றோடு பாருங்கள்.


Mettai* Tamil
டிச 24, 2024 14:23

தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்காதவர்கள் உங்களைப்போன்று , ஊழலை , தேச பிரிவினைவாதத்தை , மத தீவிரவாதிகளை ஆதரிக்கும் கொஞ்ச பேர்கள் தான் ...இதிலும் காலப்போக்கில் மாற்றம் நிகழும் . வெயிட் அண்ட் சி .....


திகழும் ஓவியன், Mumbai
டிச 24, 2024 09:08

எங்கே அந்த வாடகை வாயர்கள்


அப்பாவி
டிச 24, 2024 09:01

போன தடவை உட்ட ஊர்திகளிலிருந்து எந்த மாநிலத்தில் என்ன வளர்ச்சி அடைஞ்சிருக்கோம்னு எவனாவது சொல்லுங்க பாப்பம்?


Mohan
டிச 24, 2024 09:17

உங்க உலகமே தனி உலகம் தான் ...அத சொன்ன உனக்கு புரியுற அளவுக்கு அறிவு இருக்க ...உங்க லட்சணத்தை சென்னை மழை வெள்ளத்துல பாத்தோமே, தென் மாவட்டங்கள்ல சாந்தி இருக்குது, கோவை ல சொல்லவே வேண்டாம் ...விட்டா அவனை கூட அந்த அலங்கார ஊர்தில வெச்சு வோட் கேட்டாலும் கேப்பீங்க அவ்ளோ வெறி ..


ghee
டிச 24, 2024 10:30

இந்த வருஷம் என்ன வளர்ச்சி சொல்லேன்....ஆன உன் மூளை வளர்ச்சி ஆகலை


புதிய வீடியோ