உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி

கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி

சென்னை: “கால்நடை மருத்துவத்தில், பாரம்பரிய மூலிகை மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, ஆராய்ச்சி நடந்து வருகிறது,” என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்தார்.சென்னை வேப்பேரியில் உள்ள, அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின், 121வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அப்போது, பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் அளித்த பேட்டி:நாட்டிலேயே சிறந்த கால்நடை மருத்துவமனை இங்கு உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த விலையில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. சமீபத்தில், கால்நடைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க, மருந்தகம் துவக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய, ஆராய்ச்சி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். நம் மண்ணை சார்ந்த, ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகளை பாதுகாக்கவும், அவற்றின் கழிவுகளை பயன்படுத்துவது குறித்தும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.கால்நடைகளுக்கான அலோபதி மருத்துவ முறையில், சில இடர்பாடுகள் இருப்பதால், வரும் காலத்தில் பாரம்பரிய முறையில், மூலிகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, கால்நடை பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் பங்கேற்ற, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறுகையில், “கல்லுாரியின் முன்னாள் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கால்நடை மருத்துவக் கல்லுாரியின், 125வது ஆண்டு விழா நடைபெறும்போது, சிறப்பு தபால் தலை வெளியிடப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganesh
நவ 09, 2024 06:57

நமக்கு தான் எந்த வியாதிக்கு என்ன சித்த மருந்து சாப்பிடணும்னு தெரியல.... உடம்பு சரி இல்லாத கால்நடைய ஒரு மூலிகை காட்டை வளர்த்து அதுல விட்டேங்கன்னா அது எது வேணுமோ அதோட வியாதி தீர அது சாப்பிடுக்கும்... அத பார்த்து வேணா நம்ம மருந்து கண்டுபிடிச்சிக்கலாம்


Smba
நவ 09, 2024 06:51

முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒரு மாட்டு வைத்தியர (பாரம்பர் ப) இருந்தார்.


Svs Yaadum oore
நவ 09, 2024 06:46

கால்நடைகளுக்கான அலோபதி மருத்துவ முறையில், சில இடர்பாடுகள் இருப்பதால், பாரம்பரிய முறையில், மூலிகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாம் ......இது தொடர்பாக, கால்நடை பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனவாம் .....இந்த செய்தியை படித்தால் இங்குள்ள விடியல் மதம் மாற்றிகளுக்கு அப்படியே எரியுமே ....சித்தா ஆயுர்வேத என்றால் மதம் மாற்றிகளுக்கு வேம்பாக கசக்கும் ..சித்த வைத்திய முறையில் வேம்பும் , வீடு வாசலில் மாட்டு சாணம் தெளித்து கோலம் போடுவதுதான் தமிழர் பண்பாடு ....ஆனால் விடியல் மதம் மாற்றிகளுக்கு தமிழன் என்றால் காட்டு வாசி வெள்ளைக்கார மதம் மாற்றிகள்தான் தமிழனை படிக்க வைத்தார்களாம் ..


புதிய வீடியோ