உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு: புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு: புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:வி.சி., தலைவர் திருமாவளவன்: கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக புதிய சட்டம், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்தார். தமிழகம் முழுதும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில், பாதிக்கப்படும் மக்கள் மீது, வழக்குப்பதிவு செய்வது தொடர்கிறது. அதிகாரிகள் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு, ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கேரளா பல்கலையில் இளங்கோவடிகள் இருக்கை அமைக்க, முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதை, 2.50 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மனு அளித்துள்ளோம். வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரினோம். அரசு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., நாகை மாலி: தமிழகத்தில் பரவலாக தீண்டாமை குற்றங்கள் நடந்து வருகின்றன. இதை, ஒரு நாளில் தீர்க்க முடியாது. அரசு உறுதியாக இருந்தால் தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால், காவல்துறையினரிடம், ஜாதிய மனோநிலை இருப்பதால், அரசின் வேகத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.தீண்டாமை குற்ற வழக்குகளை, பெரும்பாலான இடங்களில், காவல் துறையினர் ஜாதிய மனப்போக்குடன் செயல்பட்டு, அந்த வழக்கை நீர்த்து போக செய்கின்றனர் பட்டியலின அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றோம். சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Tamil kumaran
மார் 31, 2025 12:13

இந்த முன்மொழியப்பட்ட விதி கடந்த 10 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை நாங்கள் கூட காட்டினோம். ஆனால் கலெக்டர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இந்த உத்தரவை பின்பற்ற மறுக்கின்றனர். கடந்த மாதம், வருவாய் துறையில் பதவி உயர்வு பெறும்போது உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியது. சீனியாரிட்டியின்படி நான் 2021 இல் துணை தாசில்தாராக இருக்க வேண்டும். இதுவரை, நான் TNOSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதிலிருந்து இங்கு வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறேன். ஆனால் தேர்வு அல்லாத ஊழியர்கள் மற்றும் 2019 இல் தேர்ச்சி பெற்ற தேர்வு ஊழியர்கள் சமூகத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே துணை தாசில்தார் மற்றும் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றனர், இது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சட்டவிரோதமானது.


R.P.Anand
மார் 31, 2025 09:54

முதல்வர் பதவியை ஒதுக்கி கொடு


Mayakannan Kannan
மார் 31, 2025 09:48

மாவட்ட தலைவர் பதவிகளில் இடஒதிக்கீடு கட்சி பின்பற்ற படுமா ?


Kulandai kannan
மார் 30, 2025 18:21

இதனால் அவா–க்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லை.


C.SRIRAM
மார் 31, 2025 23:33

நீ அரசு ஊழியனாக இருந்தால் வாங்கும் சம்பளத்தில் அவர்கள் கட்டும் வரியும் அடங்கும் வெட்கம் கெட்ட ஜென்மம்


Varadarajan Nagarajan
மார் 30, 2025 15:10

பதவி உயர்வில் இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும். நீதிமன்றம் சென்றால் அது செல்லுபடியாகாது என்பதும் தெரியும் இருந்தாலும் தேர்தல்காலம் நெருங்குவதால் இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்திரவாதம் அளித்தால் பட்டியலினத்தவர்களின் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கின்றனர். ஜாதியை வைத்துதான் பல அரசியல் கட்சிகள் காலம் ஓட்டுகின்றன. அப்படியிருக்கையில் இவர்கள் கூறும் தீண்டாமை இருந்து கொண்டு தான் இருக்கும்.


Ao AB Kovilpatti
மார் 30, 2025 13:14

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி இது நிறைவேற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது


KESAVAN,TRICHY
மார் 30, 2025 18:18

தற்குறி எல்லாம் முதல்வரானால் இதுதான் நடக்கும்.பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...


A MN
மார் 30, 2025 11:01

வேலை வாய்ப்புகள்ல ரிசர்வேஷன் இருக்கிறது தப்பு இல்ல ஆனா ப்ரோமோஷன் ரிசர்வேஷன் கொடுக்கும் போது தகுதியே இல்லாத ஒரு சிலர் மேல வந்து உட்காருறாங்க ரூல் தெரிய மாட்டேங்குது அவங்களுக்கு கீழ இருக்கறவங்களையும் மிஸ்டேக் பண்றாங்க சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் இருக்கும்போது இவங்க தேவை இல்லாத விஷயத்தில் தலையிட்டு கோர்ட் அசிங்கப்படுத்துறாங்க


மொட்டை தாசன்...
மார் 30, 2025 10:47

நாடு உருப்படவேண்டும் எனில் தகுதியானவருக்குமட்டுமே வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு தரப்படவேண்டும். இடஒதுக்கீடு மற்றும் தேவையற்ற இலவசத்தினால் பாதிக்கப்படப்போவது மக்கள் மட்டுமே அரசியல் கட்சிகள் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளுக்கு கட்டமைப்புகளும் கல்வித்தரத்தை உயர்த்துவது போன்ற நல்ல திட்டங்கள் இன்றைய எந்த அரசியல் கட்சிகளிடமும் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம் .


Rajarajan
மார் 30, 2025 10:40

அப்போ பிராமணர்கள் மேல எந்த தவறும் இல்ல. அவர்கள் எந்த வம்பு தும்புக்கும் போறதில்லன்னு தெளிவா தெரியுது. அப்புறம் என்னத்துக்கு இன்னும் அவங்க மேலயே குற்றம் சுமத்தி அரசியல் பண்றீங்க? நாட்டில் நடக்கும் வன்முறை, தீண்டாமை, பாலியில் குற்றம், ஜாதி அரசியல், ஜாதி மோதல், ஆணவ கொலை, வழிப்பறி, செயின் பறிப்பு, லஞ்சம், போக்ஸோ குற்றம், ஆள் கடத்தல், கனிமவள கடத்தல், ஊழல் போன்றவையெல்லாம் செய்வது பிராமணர் அல்லாத வேறு சில ஜாதி / மதத்தினர் தானே. வெகு சமீபத்தில் கூட, சென்னையில் நடந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது வேற்று மதத்தினர் தானே. மேற்சொன்ன குற்றங்களை செய்த மத / ஜாதி பிரிவினரின் குற்றங்களை குறிப்பிட்டு, எந்த அரசியல் தலைவரும் கண்டித்து இதுவரை பேட்டி அளித்ததுண்டா?? இதுவே பிராமணர் எங்காவது கோவிலில் தப்பி தவறி, சுண்டலில் உப்பு கூடுதலாக சேர்த்துவிட்டால் அல்லது பொங்கலில் சற்று இனிப்பு குறைந்தால், உடனே தனியார் தொலைக்காட்சிகள் என்ன பொங்கு பொங்குகின்றனர். அன்றைய மாலை விவாதத்தில், பிராமணரை பல தலைமுறைக்கு தோண்டி எடுத்து, உண்டு இல்லை போட்டு பொளந்துவிடுவர். ஆனால், மற்ற பிரிவினர் தவறுசெய்தால் ? அப்போது கண்டிப்பு இல்லையா? நீங்களே உங்கள் ஜாதி / மத குற்றவாளிகளை ஊக்குவித்துவிட்டு, ஊருக்கு இளைத்தவன் பிராமணர் மேல் குற்றத்தை திணிப்பீர்களா? இப்போதாவது அரசியல்வாதிகள் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.


ManiK
மார் 30, 2025 09:04

தகுதி இல்லாதவர்கள் தலைவர்கள் ஆனால் என்ன ஆகும் என்பதற்கு ஸடாலின், உதவா தான் சிறந்த உதாரனம். பிறப்பு முதல் இறப்பு வரை இட ஒதுக்கீடு சமூகத்துக்கு பெரிய சீர்கேடு.


புதிய வீடியோ