உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்

மதுரை : ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் செப். 28 முதல் அக். 26 வரை ஞாயிறு தோறும் இரவு 11:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06012), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 29 முதல் அக். 27 வரை திங்கள் தோறும் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் (06011), மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. இரு ரயில்களும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 6 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் செப். 24 முதல் அக். 22 வரை புதன் தோறும் மதியம் 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் (06121), மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 25 முதல் அக். 23 வரை வியாழன் தோறும் இரவு 9:00 மணிக்கு புறப்படும் ரயில் (06122), மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது. இரு ரயில்களும் தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்கின்றன. 15 'ஏசி' மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் செப். 25 முதல் அக். 23 வரை வியாழன் தோறும் இரவு 9:30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (06070), மறுநாள் காலை 10:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 26 முதல் அக். 24 வரை வெள்ளி தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் ரயில் (06069), மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்கிறது. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 6 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 'ஏசி' மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 7 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படுகின்றன. துாத்துக்குடி - சென்னை எழும்பூர் செப். 29 முதல் அக். 27 வரை திங்கள் தோறும் இரவு 11:15 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் (06018), மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 30 முதல் அக். 28 வரை செவ்வாய் தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06017), அன்றிரவு 11:15 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது. இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்கிறது. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் செப். 30 முதல் அக். 28 வரை செவ்வாய் தோறும் காலை 9:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் (06054), அன்றிரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது. மறுமார்க்கத்தில், அக். 1 முதல் 29 வரை புதன் தோறும் அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் ரயில் (06053), அன்றிரவு 8:30 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. இரு ரயில்களும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக செல்கின்றன. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே 2023 செப். 24 முதல் 'வந்தே பாரத்' ரயில் (20665/20666) இயக்கப்பட்டு வருகிறது. செவ்வாய் தவிர்த்து தினமும் காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. 8 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயில் இந்தாண்டு ஜன., 15 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் துவங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும், பண்டிகை காலத்தை முன்னிட்டும், பயணிகள் வசதிக்காக செப். 24 முதல் 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இது இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kannan
செப் 17, 2025 12:06

இது சம்பந்தமாக அனைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சருக்கு கடிதம் எழுதுவோம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 17, 2025 09:44

பெரும்பாலான ரயில்களை வெறும் கண்துடைப்புக்காக இயக்குகிறார்கள். அவை பெரும்பாலான மக்கள் பயன்படுத்த முடியாமல் இயக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு தாம்பரம் - நாகர்கோவில் ரயில் 06011 மதியம் 3:30 மணிக்கு புறப்படுகிறது. சென்னை - செங்கோட்டை ரயில் மதியம் 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது. சென்னை-திருநெல்வேலி ரயில் வெள்ளி தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படுகிறது. இவற்றை வேலைக்கு செல்வோரும், பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்போரும் பயன்படுத்த முடியாது. இந்த இரு பிரிவினர்தான் தென்மாவட்டங்களில் இருந்து அதிகம் சென்னையில் இருக்கிறார்கள். மாலை 6.00 மணிக்கு மேல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால்தான் மக்களுக்கு பயன். இல்லாவிட்டால், தேவையில்லாத நாட்களில் இயங்குவார்கள். உதாரணத்துக்கு தீபாவளி அன்று சென்னையிலிருத்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயங்குவார்கள். ஆனால் அன்றைக்கு எல்லோரும் சென்னைக்கு திருப்புவார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இப்படி தேவையில்லாத நேரத்தில் பெயருக்கு ரயில்களை இயக்கிவிட்டு அப்புறம் ரயில் நிரம்பவில்லை என்று கூறி நிறுத்திவிடுவார்கள். கேட்டால் சிறப்பு ரயில்களை இயக்கி விட்டோம் என்று கூறுவார்கள். இது இவர்களின் தந்திரம். இதன்மூலம் ஆம்னி பேருந்துகளின் கொள்ளைக்கு பணம் வாங்கிக் கொண்டு துணை போகிறார்கள். இதை உற்று கவனிப்பவர்களுக்குத்தான் தெரியும். மேலோட்டமாக பார்த்தல் தேவையான சிறப்பு ரயில்களை இயக்கியதாக கணக்கு காட்டிக்கொள்வார்கள்.


sundarsvpr
செப் 17, 2025 13:37

பயண நேரம் 10 அல்லது 12 மணி காலம் புறப்படும் இடத்தை மட்டும் கணக்கில் கொள்வது சரியில்லை. இடைப்பட்ட இடங்களில் வருபவர்களை நினைவில் கொள்கிறது ரயில்வே நிர்வாகம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 20, 2025 11:08

இடைப்பட்ட இடத்தில இருப்பவர்களுக்கு தனி ரயில்களை இயக்கலாம். அதைவிடுத்து சென்னையில் உள்ளவர்களுக்கு பயன்பாடாமல் இயக்குவது என்ன நியாயம்? அதற்க்கு ரயில்களை இடைப்பட்ட இடங்களில் இருந்தே இயக்கி விடலாமே.


Nation First
செப் 17, 2025 08:25

சென்னையிலிருந்து விழுப்புரம்.. விழுப்புரத்திலிருந்து திருச்சி அரை மணிக்கொரு சிட்டிங் வண்டிகள். திருச்சியிலிருந்து மதுரை , ராமேஸ்வரம் ரெயில்கள் அதிகம் தேவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை