உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் அக் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நடந்த போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பே சியதாவது: ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்றனர். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசு இதனைத் தடுக்க வேண்டும். வரும் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் தீர்மானம் கொண்டுவரப்படும். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் இத்தீர்மானத்தை அனைத்துக் கட்சிகள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். காசாவில் தாக்குதல் கண்மூடித் தனமானது. பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் மனப்பூர்வ ஆதரவு அளிக்கும். மனித உயிர்களை காக்க வேண்டியது நமது கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்க வேண்டும். காசாவில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். உணவுப்பொருட்களுக்கு காத்திருந்தவர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர். இது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 126 )

Rajkumar Ramamoorthy
நவ 05, 2025 14:27

வோட்டுக்காக என்ன வேண்டுமானாலும் /....


Ramalingam Shanmugam
நவ 03, 2025 11:02

எலி தான வந்து மாட்டுது


rasaa
நவ 02, 2025 12:15

தமிழ்நாட்டின் டிரம்ப்.


swaminathan
அக் 26, 2025 14:29

செம


Mohanakrishnan
அக் 23, 2025 15:39

உக்ரைன் சண்டை பற்றியும் இன்னோரு தீர்மானம் போடலாமே


sankar
அக் 23, 2025 14:00

தல இன்டர்நஷனல் லெவல்ல யோசிக்கிறார் பாத்தியா


Chess Player
அக் 22, 2025 08:03

இந்தமாதிரி தப்பு தப்ப அரசாங்கம் நடத்தின விடியவே விடியாது


muth
அக் 14, 2025 11:51

என்னது காந்திய கொன்னுட்டாங்களானு கேக்குற மாதி போர் முடிஞ்சி 1 வருஷம் ஆகுது.. உங்கள் ஆட்சியில் தமிழகம் ஒருபோதும் தலை நிமிராது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.


S.V.Srinivasan
அக் 14, 2025 07:59

இஸ்ரேல் போரெல்லாம் முடிஞ்சு அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. முழிச்சுக்கோங்க முக்யமந்திரி அவர்களே.


Palanisamy T
அக் 13, 2025 10:40

சம்பந்தமில்லாமல் வேலை யில்லாதவன் செய்கின்ற வீணான வேலையிது. தமிழக மக்களுக்கும் காஷா மக்களுக்கும் அப்படியென்ன உறவு தொடர்பு? சட்டசபையின் பொன்னான நேரத்தையும் மக்கள் வரிப் பணத்தையும் இவர் தேவையில்லாமல் வீணடிக்கின்றார் இனி இவரை நம்பி மக்கள் ஆட்சியை இவர் கையில் மீண்டும் ஒப்படைப்பது நல்லதாக தெரியவில்லை. உலகில் எங்கு எங்கோ எல்லா ஊர்களிலும் காலங்களிலும் இந்த அவலங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்குகின்றது. அப்போது இப்படித்தான் அடிக்கடி தீர்மானங்கள் போட்டுக் கொண்டேயிருப்பாரா? தமிழக மக்களை இவர் மிகக் கேவலமாக எடைப் போடுகின்றாரா? இவர் மனோ தத்துவ நிபுணரை பார்ப்பது நன்று. இனி மக்களும் சிந்திக்கவேண்டும் .


Ganesan Arumugasamy
அக் 25, 2025 09:07

சரி தான். வெளிநாட்டு விவகாரம். மாநில அரசு டிஸ் மிஸ் செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை