உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

சென்னை:ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துஉள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை:ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பிப்ரவரி, 5 காலை 7:00 முதல், மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து, தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது. தேர்தல் அன்று மாலை 6:30 மணி வரை, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, அச்சு அல்லது மின்னணு ஊடகம் வழியாக வெளியிடக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ