உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை

2 வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அவர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களிடம் விசாரித்து தகவல்கள் சேகரித்து வருகிறார்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில், ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0sa1k71l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் 2வது நாளாக இன்று (செப் 29) ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழிந்தவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரித்து வருகிறார்.

விசாரணை அதிகாரி நியமனம்

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

spr
செப் 29, 2025 20:09

எதிர்பார்த்த முடிவுதான் வெளிவரும் "இது ஒரு விபத்து. மக்கள் பொறுப்பில்லாமல் கூட்டம் கூடினார்கள் அவர்களை தா வெ க கட்சி அமைப்பாளர்கள் நெறிப்படுத்தவில்லை" என்றோ அல்லது ஒரு சில காவற்துறை அதிகாரிகள் கை காட்டப்பட்டு அவர்கள் தாற்காலிக இடமாற்றம் செய்யப்படுவார்கள் அவ்வளவே செலவு சில கோடிகள் கணக்கில் காட்டப்படும் இதைவிட கருவூர் அரசுமருத்துவ மனையை சீராக்கலாம் எதிர்காலத்த தேவைக்கும் பயன்படும் இதைவிடக் கொடுமை பல தனியார் ஊடகங்களும் செய்தித்தாள்களும் பாஜக உட்பட இதர எதிர்க் கட்சிகளும் விசாரணை என்ற பெயரில் அந்த மக்களை மேலும் மேலும் மன வேதனைக்குள்ளாக்குவதுமே


Kannan Chandran
செப் 29, 2025 14:16

இங்கு நீதி விசாரணை என்பது Final semester project மாதிரி, என்ன Output வேண்டும் என்பதை கழகம் தெரிவிக்கும் அதற்கேற்ப Report கொடுக்கப்படும்..


தமிழன்
செப் 29, 2025 13:52

ஒரு கட்சியை சேர்ந்த மக்களிடம் மட்டுமே விசாரணை கருத்து கேட்டால் ஒரு சார்பாக தீர்ப்பு சொல்ல முடியும் இல்லையா.. அப்படி என்றால் கரூர் மக்களிடம் அனைவரிடமும் விசாரணை கருத்து கேட்க வேண்டுமே.. அப்படி என்றால்.. இந்த விசாரணை கமிஷன் ஒரு 15 வருடங்கள் கழித்து அறிக்கை தருமா?


Perumal Pillai
செப் 29, 2025 13:52

An exercise in futility.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 29, 2025 13:23

தடயம் எல்லாம் துல்லியமா அழிச்சிடனும்


MUTHU
செப் 29, 2025 13:03

விசாரணை கமிஷன்கள் பொதுவாய் ஆதாரங்களை அழிக்க மட்டுமே பயன்படுத்தப்படும். இது வேறு எந்த விசாரணை அமைப்பு தலையிட விடாமல் மாநில அரசுகள் செய்யும் எளிதான உத்தி.


கூத்தாடி வாக்கியம்
செப் 29, 2025 13:01

இது எங்க சிபிஐ வந்துட போகுதுண்ணு எச்சரிக்கையாக போட்டது


அருண், சென்னை
செப் 29, 2025 12:59

திமுக இதற்கும் script கொடுக்கும்... அதுவே முடித்து வைத்தாக கருத்தும் வரும்..


maniam
செப் 29, 2025 12:25

Astana vidwan


ராமகிருஷ்ணன்
செப் 29, 2025 12:25

டாஸ்மாக் பாட்டில் பிரியாணி 200 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டினால் இப்படி எல்லாம் நடக்குமா, என்று இந்த நீதிபதி திமுகவுக்கு பாராட்டு தெரிவிப்பார்.


சமீபத்திய செய்தி