உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன

ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன

சென்னை : ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, நான்கு மாதங்களில் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் குறைந்துள்ளதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2024ல், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 501 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 483 கொலைகளாக குறைந்துள்ளன.அத்துடன், ரவுடிகளுக்கு இடையேயான பழிக்கு பழி வாங்கும் கொலைகளும் குறைந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, 22 கொலைகள் நடந்த நிலையில், இந்த ஆண்டு, 18 தான் நடந்துள்ளன. ஓ.சி.ஐ.யு., எனப்படும், திட்டமிட்ட குற்றப்புலனாய்வு பிரிவு வாயிலாக, ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். உளவுத்துறை போலீசார் வாயிலாகவும் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டு, ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் காரணமாக, பழிக்கு பழி வாங்கும் வகையில், ரவுடிகள் செய்யும் கொலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. நான்கு ஆண்டுகளில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, 4,460 பேர் எச்சரிக்கை செய்யப்பட்டனர். இதன் வாயிலாக, 326 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மீனவ நண்பன்
மே 21, 2025 08:14

சிரிப்பு வராமல் சொன்னாரா ?


ஆரூர் ரங்
மே 20, 2025 11:01

இன்று திமுக தியாகி(?) தா.கிருட்டிணன் அவர்களின் 22 வது நினைவுநாள். பழி வாங்கலின் எடுத்துக் காட்டு. இன்றுவரை அவரது இயக்கம் அஞ்சலி நிகழ்ச்சி அல்லது படத்திறப்பு கூட நடத்தவில்லை.


Barakat Ali
மே 20, 2025 09:01

நீங்க யூஸ் பண்ணிக்கிட்டீங்களா?? அல்லது அவரு உங்களை யூஸ் பண்ணிக்கிட்டாரா ????


D Natarajan
மே 20, 2025 07:46

சரியான கொத்தடிமை.


SUBBU,MADURAI
மே 20, 2025 09:50

உண்மை. ஆளுங்கட்சியின் அடிமையான இந்த டிஜிபி சங்கர்ஜிவாலை அதிரடியாக மாற்றினால் தமிழகத்தில் இன்னமும் குற்றங்கள் வெகுவாக குறைய வாய்ப்பிருக்கிறது.


அப்பாவி
மே 20, 2025 07:42

யார் அந்த சார்னு இன்னி வரைக்கும் தெரியலியே ஜிவால் சார்?


Iniyan
மே 20, 2025 07:14

திமுக செய்தி தொடர்பாளர் சொன்ன செய்தியா??


lasica
மே 20, 2025 06:39

Where? In your backyard? You are just a mouth-piece to government. Rate of murders most of them in the broad day light in the middle of the busy streets, breakins and chain snatching has been the highest since took over the government. Cant wait to get rid of this DMK government.


Raj
மே 20, 2025 05:28

வரைபடங்களும், விளக்கங்களும் யாரை சமாதானப்படுத்த மக்களைய? கொலை, வழிப்பறி, பாலியல் இல்லாத மாநிலமாக மாற்றுவது காவல்துறையின் கடமை. இது வெறும் விளக்கம் தான். கேவலம்.