உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் உதவியாளர்கள் பெயர் மாற்றம்

வருவாய் உதவியாளர்கள் பெயர் மாற்றம்

சென்னை: வருவாய் துறையில் அமைச்சு பணியாளர்களாக உள்ள வருவாய் உதவியாளர்கள், இனி மூத்த வருவாய் ஆய்வாளர்கள் என்று அழைக்கப்படுவர். வருவாய் துறையில் ஆய்வாளர்கள், உதவியாளர்கள் பணி நிலையின் பெயரை மாற்ற வேண்டும் என, வருவாய் துறை ஊழியர்கள் அரசிடம் வலியுறுத்தினர். அதை ஏற்று, மனித வள மேலாண்மை துறை வெளியிட்ட அரசாணை: வருவாய் துறையில் குறிப்பிட்ட சில பணியிடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. வருவாய் உதவியாளர்கள் பணியிடத்தின் பெயர், மூத்த வருவாய் ஆய்வாளர்கள் என்றும், இளநிலை வருவாய் உதவியாளர்களின் பெயர், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் என்றும் மாற்றப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !