உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு நகரங்களுக்கு சாலை தொகுப்பு திட்டம்

நான்கு நகரங்களுக்கு சாலை தொகுப்பு திட்டம்

-- நமது நிருபர் - ஓசூர், துாத்துக்குடி, சேலம், திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு, சாலை தொகுப்பு திட்டம் துவக்கும் பணிகளை போக்குவரத்து குழுமமான, 'கும்டா' துவக்கி உள்ளது. சென்னை பெருநகரில் போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, கும்டா என்ற பெயரில் போக்குவரத்து குழுமம், 2010ல் துவங்கப்பட்டது. இந்த குழுமம் சென்னை பெருநகர் பணிகளுடன் சேர்த்து, நகர் ஊரமைப்பு துறையின் முழுமை திட்டம் தயாரிப்பு பணிகளிலும் ஆலோசகராக செயல்படுகிறது. தற்போது, சென்னை, ஓசூர், துாத்துக்குடி, சேலம், திண்டுக்கல் ஆகிய நகரங்களில், சாலை தொகுப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த பணிகளை கும்டாவிடம் ஒப்படைக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சாலை தொகுப்பு திட்டங்கள் தயாரிப்புக்கான பணிகளை, கும்டா துவக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ