உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முல்லைப்பெரியாறு அணையில் 2வது நாளாக ஆர்.ஓ.வி.,ஆய்வு - மேலும் 2 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு

 முல்லைப்பெரியாறு அணையில் 2வது நாளாக ஆர்.ஓ.வி.,ஆய்வு - மேலும் 2 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீரில் மூழ்கியிருக்கும் அணைப்பகுதியின் பலம் குறித்து 2வது நாளாக ஆளில்லாத தானியங்கி இயந்திரம்(ஆர்.ஓ.வி.,) உதவியுடன் ஆய்வு நடந்தது. இதில் மேலும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். முல்லைப் பெரியாறு அணையில் நீரில் மூழ்கியிருக்கும் பாகங்களை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆர்.ஓ.வி., மூலம் மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுப்பணியை நேற்று முன்தினம் துவக்கினர். ஆராய்ச்சியாளர்கள் செந்தில், விஜய், ஜாலே லிங்கசாமி, தீபக்குமார் சர்மா இப்பணியில் ஈடுபட்டனர். 12 நாட்கள் தொடர்ந்து நடக்கவுள்ள நிலையில் முதல் நாளில் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு கண்காணிப்பதற்காக படகில் இயந்திரங்களை பொருத்தும் பணி நடந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று ஆர்.ஓ.வி., இயந்திரத்தை அணையின் முதல் 100 அடியை தேர்வு செய்து நீருக்கு அடியில் இறக்கி அணைப்பகுதியை படம் பிடித்து ரிசீவரில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆராய்ச்சியாளர்கள் மனிஷ் குப்தா, சர்வேதி ஆகியோர் கூடுதலாக இணைந்து கொண்டனர். இவர்களுடன் தமிழக தரப்பில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால், இளநிலை பொறியாளர் மகேந்திரன், உதவி பொறியாளர்கள் முகமது உவைஸ், தருண் கவுதம், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு, உதவி பொறியாளர்கள் ரமேஷ், பெனட்டிக், லிஜின் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி