உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: அண்ணாமலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அண்ணாமலை கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nbx2ytrz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கள்ளச்சாராயம் சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். நாகரிகமான சமுதாயத்தில் எதும் நடக்க கூடாது என நினைக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை கிராமங்களில் நடைபெறவில்லை. மாவட்ட தலைநகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெற்றதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி ஆறுதல்

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

sundar
ஜூன் 21, 2024 09:43

BJP is setting a wrong precedent in this matter


UTHAMAN
ஜூன் 20, 2024 22:48

இவர்கள் போராளிகள் அல்ல.......பொறுக்கிகள்.........இந்த பதிவை பார்த்தாலும் சூடு சொரணையற்ற நடைபிணங்கள்.


krishna
ஜூன் 20, 2024 22:38

யு டு அண்ணாமலை


krishna
ஜூன் 20, 2024 20:59

இது தவறு. கட்சி நிதியிலிருந்து கொடுத்தாலும் தவறு. இன்று கட்சி நிதியிலிருந்து கொடுப்பார். நாளை முதலமைச்சர் ஆனால் மக்கள் வரிப்பணத்தை கொடுப்பார். சரியான முடிவு எடுக்க தவறிவிட்டார். உயர்ந்த அரசியல் செய்தவர் திராவிட அரசியல் லெவல் க்கு தாழ்ந்து விட்டார். இனிமேல் BJP க்கு வாக்களித்தவர்கள் NOTA வுக்குத்தான் வாக்களிப்பார்கள் .பிரேமலதா விஜயகாந்த் பாராட்டுக்குரியவர்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 20, 2024 18:37

"ஒரு சராசரி மனிதன் தன் உயிருக்கு காப்பீடு செய்து இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தவறாமல் பீரிமியம் கட்டுகிறான், அவன் மறைவிற்கு பிறகு அவனது குடும்பத்திற்கு ஒரு தொகை கிடைக்கிறது.. இதுவே தமிழகத்தில் ஒரு மதுப் ப்ரியன் பீரிமியம் தொகையை டாஸ்மாக்குக்கு மற்றும் அரசியல் வாதிகள் ஆசீர்வாதம் பெற்ற சாராய வியாபாரிக்கு, தினமும் குடித்து செலுத்துகிறான், அவன் மறைவிற்கு பிறகு அரசாங்கமே அவன் குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகை அறிவிக்கிறது.. ஆக, ஒழுக்கமாக வாழ்ந்து, வயிற்றை கட்டி, வாயைக் கட்டி சேமித்து உயிர் காப்பீடு பீரிமியம் செலுத்துவதை விட .... ஹிஹிஹி .....


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 18:35

கடன் தொல்லை அதிகமாக இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. இது போல இறந்தால் எல்லா கட்சிகளும் குரல் கொடுக்கும். நிதியும் கொட்டும். அதை வைத்து குடும்பமாவது பிழைக்கும். இதுவும் ஒரு பிழைப்பா?


naranam
ஜூன் 20, 2024 18:34

ஒழுக்கமாக வாழும் எழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கு இந்தப் பணத்தைச் செலவிட வேண்டும்.


duruvasar
ஜூன் 20, 2024 17:38

இதுவரை வந்த முடிவுகளில் ஸ்டாலின் 40 க்கு 42 என்பதை தாண்டி சாதனை புறிந்துள்ளதை திமுகவினர் ஆறு பெரும் விழாவாக கொண்டாடுவார்கள் ஓ என் எண்


SUBRAMANIAN P
ஜூன் 20, 2024 17:36

அரசு கொடுப்பது மக்கள் வரிப்பணம். அண்ணாமலை கொடுப்பது கட்சி பணம். சொல்லப்போனா இதுக்கெல்லாம் பணமே கொடுக்கக்கூடாது.


Vijayakumar Srinivasan
ஜூன் 21, 2024 05:22

உண்மை தான் சார்.தவறானமுன்னுதாரனம்.தொடர்ந்துஇதுபோல்நிவாரணம்கொடுக்கமுடியுமா?தடுக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.நிதியில்ஒதுகீடுசெய்யும்நிலைவரலாம்


கோவிந்தராஜ்
ஜூன் 20, 2024 17:34

எண்ணமோ ஆய் ஊய் ணாங் க. கடைசி ல ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை