உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயத்திற்கு ரூ.10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.5 லட்சமா?

கள்ளச்சாராயத்திற்கு ரூ.10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.5 லட்சமா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் கூறியதாவது:

இறந்த பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அறிவித்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. இதை பார்க்கும்போது இந்த ஆட்சியின் அவலம் தெரிகிறது.தமிழக அளவில் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற கோர விபத்தில் இறந்தால், அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைப்பதற்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும். சட்டத்தை திருத்தி, உடனடியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு சம்பத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜூலை 09, 2025 06:34

கள்ளச்சாராயத்திற்கு ரூ.10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் ..கள்ளசாராயத்தில் இறந்தவர் குடும்பம் மனம் திருந்தி ..இனிமேல் நல்லசாராயம் குடிக்க டாஸ்மாக் வந்தேதீரும் ..அதனால் தமிழக அரசின் வருமானம் உயரும் .. அதனால் பத்து லட்சம் .கொடுத்தோம் .மாணவர் குடும்பம் முதலில் மது அருந்துமா என்பதே கேள்வியாக இருக்கிறது ...ஏன் பத்து லட்சம் கொடுக்கவேண்டும் ..?எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ,,இரும்பு கரத்தில் ஆட்சி இது ..தூய்மையின் ஆட்சி.. நேர்மையின் ஆட்சி ..கலைஞரைப்போல் ..ஸ்டாலினும் கரை படியா கரங்களுக்கு சொந்தக்காரர் .. ஊழலுக்கு நெருப்பு ..


முக்கிய வீடியோ