உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்த போது, ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hpmc6pac&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்வராஜ் உள்ளிட்டோரை கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சேகரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
செப் 02, 2024 22:15

ஒரு காலத்தில் அமைச்சர்கள் மோசடி வழக்குகளில் அதிகம் சிக்குவார்கள். இப்பொழுது அமைச்சர்களின் மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய அல்லக்கைகளும் சிக்குகிறார்கள். சட்டம், நீதித்துறை முறையாக தன்னுடைய பணியை செய்தால் மோசடிகள் முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது.


R K Raman
செப் 02, 2024 20:10

?️ தம்பி என்ன ஆனார்?


Premanathan Sambandam
செப் 02, 2024 17:08

சூப்பர் கைது மட்டுமே நடக்கும் தண்டனை கிடைக்காது ஆனால் சாதாரண குப்பன் சுப்பன் 500 ருபாய் திருடினாலே அவசியம் இரண்டு வருடம் சிறைத் தண்டனை இதுதான் நீதி


ALWAR
செப் 02, 2024 16:53

அணைத்து திருடர் முன்னேற்ற கழகம் பங்காளிகள்


sundarsvpr
செப் 02, 2024 16:38

காவல் துறை கைது செய்யப்போகிறேன் என்று கூறி கைது செய்வது ஒரு திறமை என்று கூறமுடியாது. கே .என் நேருவின் சகோதரர் ராமஜெயம் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது செய்திட காவல் துறையால் முடியவில்லை. ராமஜெயத்தை செந்தில் பாலாஜியின் சகோதரரை காவல்துறையில் நியமனம் செய்தால் பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதுபோல் குற்றவாளிகள் காணாமல் போகமாட்டார்கள்


D.Ambujavalli
செப் 02, 2024 16:25

நேற்று சம்பாதித்தவர் இன்று மாட்டினார், காட்சி மாறும், இன்று சம்பாதிப்பவர் நாளை மாற்றுவார் ஆனால் யார் சம்பாத்தியமும் நாட்டுக்கு சேராது யாருக்கும் தண்டனை கிடைக்காது நேரம், மக்கள் பணம் வீணாவது தான் மிச்சம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை