உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் புகார்: இயக்குனர், பொது மேலாளர்களுக்கு சம்மன்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் புகார்: இயக்குனர், பொது மேலாளர்களுக்கு சம்மன்

சென்னை: 'டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதால், அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, அந்நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர்களுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.தமிழகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில், 'டாஸ்மாக்' நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் மது ஆலைகளில் இருந்து, மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும், 4,830 சில்லரை கடைகள் வாயிலாக விற்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pxtyvqhl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.அதன் அடிப்படையில், கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இச்சோதனையில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டது.இதையடுத்து, டாஸ்மாக் ஊழல் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, அதன் இயக்குநர் விசாகன், பொது மேலாளர்கள் சங்கீதா, ராமதுரை முருகன் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

thehindu
ஏப் 25, 2025 10:57

பல லச்சம் கோடிகள் கோடிக்கணக்கான கோடிகள் டிரில்லன் டாலர் ஊழல் கொள்ளை புகார்களை மூடி மறைத்துவிட்ட இந்துமதவாத பயங்கரவாத அரசுக்கு முன் இதெல்லாம் ஒரு பிரச்சினையா? நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் ஒப்பாரிவைப்பது ஏ ன்


अप्पावी
ஏப் 25, 2025 09:45

அதிகாரிகள் பீதி வாணாம். சீக்கிரமேவ ஜாமீனில் வெளியே வந்து பதவியை கண்டிநியூ பண்ணலாம். அணில் மாதிரி ஆளுங்க நீங்க.


சாமானியன்
ஏப் 25, 2025 08:51

நீதித்துறைக்கு ஒரு அறிவுரை. அரசியல்வாதிகளின் வழக்குகளை வேறமாதிரி டீல் பண்ணுங்க. எவ்வளவு சீக்கிரம் முடிக்க ( தண்டனை யோட) முடியுமோ அதைச் செய்யுங்க. கவர்னருக்கு மூன்று மாதம் கெடு கொடுத்த நீங்கள் வழக்குகளை 180 நாட்களுக்குள் முடித்து வைத்தால் நல்லது. வாய்தா கிடையாது.


Ramona
ஏப் 25, 2025 06:51

இதுவும் நீத்து போகும், சும்மா கண் துடைப்புக்காக நோட்டீஸ் ,சம்மன், கோர்ட் கேஸ், விசாரனை, ரெய்டு , கடைசியில் மல்லாந்து ,போதிய ஆதாரம்,சாட்சிகளின், சாட்சிகள் பல்ட்டி ,என காரணமாக வழக்கு முடித்து வைக்கப்படும்..


raja
ஏப் 25, 2025 06:16

ஹா ஹா ஹா கேடுகெட்ட இழி பிறவி திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தின் கொள்ளைக்கு துணை போனால் டூ ஜி சாதிக்கின் , வெங்கடேச பண்ணையார் போன்றவர்களின் நிலை தான் வரும் இவர்களுக்கும்... அதாவது தற்கொலை செய்ய படுவார்கள் ...


D.Ambujavalli
ஏப் 25, 2025 05:57

அவர்கள், தங்கள் தலை தப்பிக்க வேண்டுமென்று, அமைச்சர், முதல் குடும்பம் என்று ஒவ்வொரு இடத்தின் தொடர்பு நிலவரத்தை, புட்டுப் புட்டு வைத்துவிடுவார்கள் ஆனால் சிறையிலும், வெளியிலும் அவர்களுக்கு, குடும்பங்களுக்குத்தான் ஏழரை பிடித்து ஆட்டம்,


சமீபத்திய செய்தி