உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 41 அரசு மருத்துவமனைக்கு ரூ.116.55 கோடி ஒதுக்கீடு

41 அரசு மருத்துவமனைக்கு ரூ.116.55 கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி: தமிழகத்தில், 41 அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த, 116.55 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.மாநிலங்களில், சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025 - 26ம் நிதியாண்டுக்கான 15வது நிதிக்குழு சுகாதார மானியங்களின் கீழ், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளுக்கும் தேவையான நிதி கணக்கிடப்பட்டு, மொத்தம், 116.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறு, திண்டுக்கல் நான்கு, திருவள்ளுர், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா மூன்று, சேலம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை, நாமக்கல், ராணிப்பேட்டை, கோவை - வேட்டைக்காரன்புதுார் மருத்துவமனை, 3.5 கோடி ரூபாய், தென்காசி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவமனை என, மொத்தம், 41 மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை, 'நேஷனல் ஹெல்த் மிஷன்' வாயிலாக, பொதுப்பணித்துறையால் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kulandai kannan
மே 23, 2025 13:23

ஏ...வ்....


Varadarajan Nagarajan
மே 23, 2025 07:24

எப்பொழுதும்போல் ஸ்டிக்கர் ஒட்டப்படும். நிதி ஒன்றிய மத்திய அரசுடையது. பெயர் எங்களுடையது. மத்திய அரசு நிதியில் அம்ரி பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை நேற்று திறந்துவைத்தபோதும் இதேபோல் திமுக தலைவர்கள் வாழ்க கோஷம்.


புதிய வீடியோ