உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.13 கோடி பறிமுதல்

தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.13 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 3 நாட்களுக்கு மேலாக, கதிர் ஆன்ந்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், கல்லுாரியில் உள்ள, சர்வர் அறைக்கு, சீல் வைக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ryk0381x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளியான தகவல் பின்வருமாறு: கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள், வீட்டிலிருந்து சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கதிர் ஆனந்த் வீட்டில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கதிர் ஆனந்தின் சொத்துக்கள் குறித்த விவரங்களை திரட்டி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Raghavan
ஜன 21, 2025 23:43

இவன் அமித்ஷா பையனுடைய தோஸ்து. எங்கே போய் யார்யாரை பார்க்கவேண்டுமோ பார்த்து ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள். இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம். லிப்ஸ்டிக் வாயன் சும்மா இருந்தால்தானே. தனக்கும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தலைமையிடம் கேட்டு இருப்பார். கனிமொழி மூலமாக தலைமை ஏற்பாடாகக்கூட இருக்கலாம் இந்த அமலாக்க சோதனை. என்கிட்ட வாலாட்டினால் இது போல் செய்துவிடுவேன் என்று மறைமுகமாக கூட்டணி கச்சிக்கும் ஒரு எச்சரிக்கை.


Minimole P C
ஜன 22, 2025 08:16

Please understand the news properly before putting comments. Actually, this search is an extension of the case filed against them during the election for distributing the money to the voters initiated by the EC. That is getting continued. Like Gangai every time the ED goes for ride, they get good amount of money. To that extent their source is good. The next day visit by the lipstick vayan as per your nomenclature to Delhi, will definitely pay result as these people go and meet people like Amitshaw and say that we have 40 MPs and in any intoward incident by Nitin and Babu, we here to support you. They also allowe that. We shall pity Annamalai that he may get the chance of wearing chappel.


Barakat Ali
ஜன 21, 2025 22:01

அமலாக்கத்துறையிடம் கதிருக்கு செல்வாக்கு இல்லாவிட்டால் அள்ளியிருப்பார்கள் ..... பிச்சாத்து பதிமூணு கோடி புடிச்சாங்களா ? கட்டிங் யார் யாருக்கு போயிருக்கும் ? நிம்மிமம்மி, அமலாக்கம், அமித் ஷா etc. etc.????


adalarasan
ஜன 21, 2025 21:56

13கோடி,oru ஜூ,ஜிபி .


Ramesh Sargam
ஜன 21, 2025 21:46

பிழைக்கத்தெரியாத எம்பி.


Anbuselvan
ஜன 21, 2025 19:37

ஜுஜுபி...


Gurumurthy Kalyanaraman
ஜன 21, 2025 19:35

அவ்வளவு சின்ன பிள்ளை அல்ல அவர், இவ்வளவு சின்ன தொகையை பதுக்கி வைப்பதற்கு.


SUBRAMANIAN P
ஜன 21, 2025 17:49

தவறான தகவல்... வெறும் பதிமூணு கோடி அரசு ஊழியர் லஞ்சம் பறிமுதல் என்று சொன்னாலும் ஓரளவுக்கு நம்பலாம்.. அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஓட்டு போட்டு தமிழக மக்கள் இந்த பிச்சைக்காரர்களை கொஞ்சமாவது பணக்காரர்கள் ஆக்கவேண்டும்


Perumal Pillai
ஜன 21, 2025 17:46

A dmk man sometimes back allegedly claimed that Duraimurugan has amassed over 30000 crores Rupees. This 13 crore Rupees is a negligible amount by the ministers standards.


என்றும் இந்தியன்
ஜன 21, 2025 17:32

ரூ.13.7 கோடி பறிமுதல். இது தவறு. இதை நான் நம்பமாட்டேன். அவ்வளவுவுவுவு பிச்சைக்காரனா திருட்டுத் திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதி, இருக்கவே இருக்காது ரூ 13.7 ஆயிரம் கோடி என்று சொன்னால் ஒத்துக்கொள்வேன்


Barakat Ali
ஜன 21, 2025 17:29

பதிமூணு கோடி எங்க குடும்ப சொத்துல 0.0000000001 சதவிகிதம் கூடக் கிடையாது .....


முக்கிய வீடியோ